Vadivelu - வடிவேலு யாரின் வாய்ப்பையும் பறித்ததில்லை...தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: Vadivelu (வடிவேலு) வடிவேலு யாரின் வாய்ப்பையும் தட்டி பறித்ததில்லை என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி சேனல்களிலும் அவரே தோன்றிக்கொண்டிருந்தார். இதனால் வடிவேலு முழுமையாக மக்களிடமிருந்து விலகிவிடவில்லை. சூழல் இப்படி இருக்க அவரை சுற்றிய பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: அதன்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. வடிவேலு இன்னமும் பழைய டெம்ப்ளேட்டுக்குள்ளேயே இருக்கிறார் என்று படம் பார்த்த ரசிகர்கள் ஓபனாக விமர்சனம் வைத்தனர். எனவே வடிவேலு தனது ஸ்டைலை மாற்றி தற்கால சினிமாவுக்குள் விரைவில் கலப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமன்னன்: அந்தப் படத்துக்கு பிறகு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் பல பேட்டிகளில் சொன்னபடியே இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னனில் காட்சிப்படுத்தியிருந்தார். வடிவேலுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு படமும் மெகா ஹிட்டடித்தது. மேலும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரம்தான் அதிகம் வரும் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
தொடர் குற்றச்சாட்டுக்கள்: வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தாலும் அவரை சுற்றி சுமூகமான சூழல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடன் நடித்த பலரும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர். ஒன்றிரண்டு பேருடன் நின்றுவிடும் என நினைத்தால் அந்தப் பட்டியல் மளிகை கடை லிஸ்ட் போல் நீண்டு கொண்டே செல்கிறது.
வாய்ப்பை தட்டி பறித்ததில்லை: இந்நிலையில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "வடிவேலு யாருடைய வாய்ப்பையும் தட்டி பறித்துவிட்டார் என சொல்லிவிட முடியாது. அவர் என்னுடன் பணியாற்றியபோது அப்படி இல்லை. அவருக்கு தேவையானவர்களை படத்தில் போட சொல்வார். நானும் சரி என்பேன். ஹீரோக்களும் தங்களுக்கு பிடித்தவர்களை புக் செய்வது வழக்கம்தான். இது வடிவேலுவிடம் மட்டும் இருக்கும் குணம் இல்லை.
வித்தியாசம்தான்: மற்றவர்களின் வாய்ப்பை வடிவேலு கெடுப்பதாக சொல்வதும் வித்தியாசமாகவே இருக்கிறது. அவர்கள் வாய்ப்பு போனதற்கு தயாரிப்பு தரப்புகூட காரணமாக இருக்கலாம். அவருக்கும் தம்பி ராமையாவுக்கும் பிரச்னை இருந்தது. ஆனால் அது பூதாகரம் ஆகும் அளவு இல்லை. அவர்களது சண்டை அப்பா - மகன் சண்டைதான். அவர்கள் சண்டையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டாலே போதும்" என்றார். மாணிக்கம் நாராயணன் வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











