twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிஜிட்டல் விற்பனை.. ஒரு பெரிய படம் வாங்கினால், 5 சிறு படங்களை வாங்க வேண்டும்.. தயாரிப்பாளர் யோசனை!

    By
    |

    சென்னை: எந்த டிஜிட்டல் நிறுவனம் பெரிய படம் ஒன்றை வாங்குகிறதோ, அந்த நிறுவனம் 5 சிறு முதலீட்டு படங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார், தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன்.

    Recommended Video

    Chennai Theatre நிலைமை | எலிகள் ராஜ்யமான Theatreகள் | Soorarai pottru | Ponmagal Vandhal

    ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் என்ற படத்தை அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிட அதை தயாரித்துள்ள சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் முடிவு செய்துள்ளது.

    இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யா நடிக்கும் படங்களையும் அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களை இனி தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று தெரிவித்தனர்.

    ஹேப்பி பர்த்டே செல்ஃபி புள்ள.. பானா காத்தாடி டு சூப்பர் டீலக்ஸ்.. சமந்தாவின் 7 சூப்பர் ஹிட் படங்கள்ஹேப்பி பர்த்டே செல்ஃபி புள்ள.. பானா காத்தாடி டு சூப்பர் டீலக்ஸ்.. சமந்தாவின் 7 சூப்பர் ஹிட் படங்கள்

    தேனாண்டாள் பிலிம்ஸ்

    தேனாண்டாள் பிலிம்ஸ்

    இதையடுத்து இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளர்கள் ஓ.டி.டி-க்கு ஆதரவாகவும் தியேட்டர் அதிபர்கள் அதற்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இப்போது லாக்டவுன் இருப்பதால், அத்தனை சங்கங்களும் நேரடியாக சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்ற முரளி ராம நாராயணன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவுட்ரைட் முறை

    அவுட்ரைட் முறை

    அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ் திரைப்படங்களை டிஜிட்டலில் வெளியிடும் முறைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். பெரிய படங்களுக்கு திரையரங்குகள் எப்படி அதிகமாக கிடைக்கிறதோ, அதே போல டிஜிட்டலில் பெரிய படங்களை மட்டும்தான் அவுட்ரைட் முறையில் விற்க முடிகிறது. ஆனால், சிறுபடங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை, டிஜிட்டல் மார்க்கெட்டிலும் அவுட்ரைட் முறையில் விற்க முடிவதில்லை.

    ஓ.டி.டி வியாபாரம்

    ஓ.டி.டி வியாபாரம்

    இந்த நிலை மாற வேண்டும். இப்போது எடுக்கப்படும் முடிவு, இனி வரும் காலங்களில் சிறிய படங்களின் விற்பனையை சுலபமானதாக மாற்ற வேண்டும். இந்த ஓ.டி.டி வியாபாரத்தை வரைமுறைப்படுத்தி வியாபார ஒழுங்கு கொண்டு வர வேண்டும். அதாவது, எந்த ஒரு டிஜிட்டல் நிறுவனம் பெரிய படம் ஒன்றை வாங்குகிறதோ, அந்த நிறுவனம் 5 சிறு முதலீட்டு படங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும்.

    சிரமம் இல்லாமல்

    சிரமம் இல்லாமல்

    அதை அந்த பெரிய படத்தை விற்கும் தயாரிப்பாளர், உறுதி செய்ய வேண்டும் என்ற வரைமுறையை கொண்டு வரவேண்டும். அதற்கு பெரிய தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதை நமது சங்கத்தின் மூலம் நடைமுறைத்த கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துழைத்தால், வருடத்துக்கு 25 பெரிய படங்கள் வியாபாரமானால், 125 சிறிய படங்கள் சிரமமில்லாமல் வியாபாரம் ஆகும்.

    சுமூகமான சூழ்நிலை

    சுமூகமான சூழ்நிலை

    திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தார்கள் ஒன்று கூடி ஒரு சுமூகமான வியாபார சூழ்நிலை உருவாக ஒத்துழைக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் ஒன்றான கம்யூட்டரைஸ்ட் டிக்கெட்டிங் முறையை அனைத்து திரையரங்குகளிலும் அறிமுகப்படுத்தி வியாபாரத்தின் வெளிப்படைத் தன்மையை திரையரங்கு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English summary
    Producer Murali Rama Narayanan has sent a statement about film release on OTT platform
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X