புஷ்பா 2 காட்டுத்தீயில் அஜித்தின் குட் பேட் அக்லி அறிவிப்பு.. தயாரிப்பாளர் கொடுத்த ட்விஸ்ட்!

சென்னை நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்திய அளவில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த மாநிலங்களில் படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலரை பாட்னாவில் படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் இன்றைய தினம் சென்னையிலும் கிஸ்ஸிக் பாடலை வெளியிட்டனர். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நவீன், தமிழில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டை பேசியுள்ளார்.

ajithkumar good bad ugly movie producer naveen


புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்திய அளவில் பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகியுள்ள நிலையில் அடுத்தடுத்த இடங்களில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பாட்னாவில் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு வரும் அளவில் ஏராளமான ரசிகர்கள் படக்குழுவினரை பார்க்க திரண்டிருந்தனர்.

நெல்சன் திலீப்குமார் -அல்லு அர்ஜுன் கூட்டணி?: இதனால் இந்த படத்திற்கு வட இந்திய ரசிகர்களும் வெயிட்டிங்கில் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் புக்கிங்கிலும் ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றைய தினம் சென்னையில் படத்தின் வைல்ட்ஃபயர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ லீலா தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்துள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இணைந்துள்ளார். இந்நிலையில் அவர் அல்லு அர்ச்சனை இயக்குவாரா என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அதை அல்லு அர்ஜுன்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தான் எப்போதுமே தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு: இதையடுத்து அல்லு அர்ஜுனும் கீழே அமர்ந்தபடி கைகளை உயர்த்தி காட்டினார். இதையடுத்து இவர்களின் கூட்டணி விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மேடையில் பேசிய நெல்சன் திலிப்குமார் இந்த படத்தின் முதல் பாகத்தை பார்த்த தான் மிகவும் உற்சாகமடைந்ததாகவும் அதே போல வரும் 5ம் தேதி இந்த படத்தில் 2வது பாகத்தை பார்க்க மிகவும் ஆர்வமுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் நவீன், மேடையேறி படம் குறித்த தன்னுடைய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் பகிர்ந்துக் கொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

குட் பேட் அக்லி அப்டேட்: இந்நிலையில் அவரிடம் தமிழில் அவர் தயாரித்து வரும் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டை தொகுப்பாளர்கள் கேட்டனர். படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடந்து வருவதாகவும் இன்னும் ஏழு நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்து ரிலீஸ் குறித்து பேசிய அவர், முன்னதாக அதிகமான முறை பொங்கல் ரிலீசாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அதை உறுதிப்படுத்தாமல் ஆனால் என்று ஒரு ட்விஸ்ட்டுடன் தன்னுடைய பேச்சை மாற்றியுள்ளார். இந்த படம் தங்களுக்கு முதல் தமிழ் படமாக அமைந்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


பொங்கல் ரிலீஸ்: அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில் இதில் குட் பேட் அக்லி படம் திட்டமிட்டபடி பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது, முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி படம் கோடை கொண்டாட்டத்திற்கு தள்ளிப்போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளரும் இன்றைய தினம் பேசியுள்ளார். விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X