Kanguva :5 மொழிகளில் உருவாகும் கங்குவா படத்தின் டீசர்.. முன்னணி நடிகர்கள் வாய்சில் உருவாக்கம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் கங்குவா. இந்தப் படத்தின் டைட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது.

படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. மொத்தமாக 10 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Producer of Kanguva movie updates about teaser of Kanguva and will be release on June

கங்குவா டீசர் குறித்து அப்டேட் தெரிவித்த தயாரிப்பாளர் : நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அவரது 42வது படமாக உருவாகி வருகிறது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தை இயக்குநர் சிவா டைரக்ட் செய்து வருகிறார். இதுவரை கமர்ஷியல் படங்களை மட்டுமே இயக்கிவந்த சிவா, இந்தப் படத்தில் வரலாற்றுக் கதையை கையில் எடுத்துள்ளது அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் சூர்யாவிற்கு பாலிவுட் நாயகி திஷா பட்டானி ஜோடியாகியுள்ளார். மிர்ணாள் தாக்கூரும் மற்றொரு நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. மே மாத மத்தியில் இந்த சூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும்.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமை அமேசான் நிறுவனத்திற்கு 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேன்டசி பிக்ஷனாக உருவாகியுள்ள இந்தப் படம், 100 ஆண்டுகளுக்கு முந்தைய கதையை கதைக்களமாக கொண்டுள்ளது.

Producer of Kanguva movie updates about teaser of Kanguva and will be release on June

இந்தப் படம் குறித்த சில சுவாரஸ்யங்களை தனது சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பகிர்ந்துள்ளார். அதில் இதுவரை தமிழில் வெளியான படங்களில் ரிலீசுக்கு முன்னதாக அதிகமாக விற்பனையான படங்களில் கங்குவா படம்தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் தென்னிந்திய அளவிலான டிஜிட்டல் ரைட்ஸ் மட்டுமே 80 கோடி ரூபாய்க்கு அமேசானிற்கு விற்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கங்குவா படத்தின் டீசர் தயாராகியுள்ளதாகவும் வரும் ஜூன் மாதத்தில் இந்த டீசர் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்த டீசர் வெளியாகவுள்ளதாகவும் ஒவ்வொரு மொழியில் அந்தந்த மொழிகளில் முன்னணி நடிகர்கள் டீசருக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளதாகவும் அதற்குத்தான் தற்போது நேரம் பிடிப்பதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X