படம் ரிலீசுக்கு முன்னாடியே தயாரிப்பாளர்கிட்ட இருந்து ரூ.1.15 கோடி கார் பரிசு... என்ன நம்பிக்கை!

ஐதராபாத் : ரவி தேஜா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் கில்லாடி.

இந்தப் படம் பிப்ரவரி 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக டைரக்டருக்கு தயாரிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவி தேஜா

நடிகர் ரவி தேஜா

தெலுங்குப்பட உலகில் மசாலா அதிரடி படங்களில் நடித்து புகழ் பெற்று வருபவர் ரவி தேஜா. இவரது படங்கள் ஆந்திர ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அத்தகைய ஆக்ஷன் மசாலா படங்களை தேடி நடித்து வருகிறார் ரவி தேஜா.

கில்லாடி படம்

கில்லாடி படம்

கடந்த பொங்கலுக்கு இவரது நடிப்பில் கிராக் என்ற அதிரடி படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவரது அடுத்தப்படம் கில்லாடி தற்போது வரும் பிப்ரவரி 11ம் தேதி ரிலீசாக உள்ளது.

ரமேஷ் வர்மா இயக்கம்

ரமேஷ் வர்மா இயக்கம்

இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ரமேஷ் வர்மா. கோனேரு சத்யநாராயணா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மிகவும் சிறப்பாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் டிம்பிள் ஹயாத்தி. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் சிறப்பான வரவேற்பை பெற்றது.

படத்தில் இணைந்த விஷ்ணு விஷால்

படத்தில் இணைந்த விஷ்ணு விஷால்

மேலும் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ரவி தேஜாவுடன் இணைந்துள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால் விஷ்ணு விஷால் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநருக்கு ரேஞ்ச் ரோவர் பரிசு

இயக்குநருக்கு ரேஞ்ச் ரோவர் பரிசு

இந்நிலையில் இந்தப் படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா தற்போது 1.15 கோடி ரூபாய் மதிப்புள் ரேஞ்ச் ரோவர் காரை அவருக்கு பரிசளித்துள்ளார்.

பிப்ரவரி 11ல் ரிலீஸ்

பிப்ரவரி 11ல் ரிலீஸ்

முன்னதாக கோனேரு சத்யநாராயணாவிற்காக பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிப்பில் ரக்ஷசுடு என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கியிருந்தார் ரமேஷ் வர்மா. இந்நிலையில் தற்போது ரவி தேஜா இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் கில்லாடி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வரும் பிப்ரவரி 11ம் தேதி ரிலீசாக உள்ளது.

மிகப்பெரிய விலை போன இந்தி ரைட்ஸ்

மிகப்பெரிய விலை போன இந்தி ரைட்ஸ்

முன்னதாக இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் மிகவும் பெரிய தொகைக்கு கைமாறியுள்ளதாக ரமேஷ் வர்மா அப்டேட் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X