Lalith Kumar: தயாரிப்பாளர் லலித்குமாரை அழவைத்த விஜய்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் த்ரிஷா. சூப்பர் ஹிட் ஜோடியான இந்த காம்பினேஷன் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.
படத்தில் விஜய்யின் போர்ஷன்கள் இன்னும் 10 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் லலித்குமாரை அழவைத்த விஜய்: நடிகர் விஜய், த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் லியோ. இந்தப் படத்தில் விஜய் -லோகேஷ் காம்பினேஷனும் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் மேலும் சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் விஜய்யின் போர்ஷன்கள் இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியில் படம் குறித்து, விஜய்க்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள உறவு குறித்தும் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
மேலும் படம் திட்டமிட்டபடி சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் இதனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள படக்குழுவினருக்கு 3 மாதங்கள் கிடைக்கும் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனால் படம் அறிவித்தபடி அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் LCUவில் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், படம் ரிலீசாக ஏறக்குறைய மூன்றரை மாதங்கள் உள்ளதாகவும் LCU குறித்து பின்பு அறிவிப்போம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ள நிலையில், முன்னதாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தப் பாடலின் ப்ரமோ இன்று மாலை வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு குறித்தும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அறிவித்துள்ளார்.
பிரபல சேனலுக்கு லலித்குமார் அடுத்தடுத்த பேட்டிகளை அளித்து வருகிறார். அவரது பேட்டியின் இரண்டாவது பார்ட்டில் அவர் விஜய் தன்னை அழவைத்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். பீஸ்ட் படம் ரிலீசான சமயத்தில் தன்னை அழைத்து பேசிய விஜய், நாம் இருவரும் இணைந்து படம் செய்யலாமா என்று கேட்டதாகவும் இதை கேட்டவுடன் தான் அழுதுவிட்டதாகவும் லலித்குமார் கூறியுள்ளார். விஜய்யை வைத்து படம் தயாரிக்க பிரபல நிறுவனங்கள் காத்திருக்கையில் தனக்கு விஜய் அந்த வாய்ப்பை கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தன்னிடம் வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்னதாக லியோ படத்தின் பூஜை ஸ்டில்களை வெளியிடக் கூடாது என்று அவர் கண்டிஷன் போட்டதாகவும் அதை தாங்கள் மெயின்டெயின் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லலித்குமார் அளித்திருந்த பேட்டியில், நா ரெடி பாடலில் ஒரு நாள் முன்னதாக சூட்டிங்கை முடித்துக் கொடுத்து தனக்கு ஒரு கோடி ரூபாய் வரைவில் விஜய் சேமித்து கொடுத்ததாகவும் பாராட்டியிருந்தார்.


Click it and Unblock the Notifications











