Thalapathy68 movie: என்னது தளபதி68 ஸ்கிரிப்டே இன்னும் வரலையா.. வெட்கப்பட்ட வெங்கட்பிரபு!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கியது. தொடர்ந்து படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் மாஸ் காட்டி வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த 5 நாட்களில் இந்தப் படத்தின் கலெக்ஷன் சர்வதேச அளவில் 475 கோடியை எட்டியுள்ளதாகவும் இன்றைய தினமும் விடுமுறை என்பதால் இந்தப் படத்தின் கலெக்ஷன்கள் 500 கோடியை தாண்டி 500 கோடி கிளப்பில் இணையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தளபதி 68 படம்: இதனிடையே தனது அடுத்தப் படமான தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் விஜய். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கிய நிலையில், முதல்கட்டமாக படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர்கள் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பிரண்ட்ஷிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சிக்கு பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் நடனம் அமைத்துள்ளார்.
அடுத்தடுத்த படப்பிடிப்புகள்: இதையடுத்து தற்போது படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சென்னையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து படக்குழுவினர் வெளிநாட்டிற்கு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக செல்ல திட்டமிட்டுள்ளனர். படத்தின் அதிகப்பட்ச காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் இன்று முதல் வெளியாகவுள்ளதாக முன்னதாக தயாரிப்புத் தரப்பு அப்டேட் தெரிவித்திருந்தது.
தம்பி ஸ்கிரிப்ட் இன்னும் வரல: இந்நிலையில் தயாரிப்பு தரப்பான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இன்றைய பதிவில் இன்று விஜயதசமியில் அந்த ஸ்கிரிப்ட் கொஞ்சம் அனுப்பினால் அதை பூஜை போட்றலாம் என்று கலாய்த்துள்ளனர். இதுவரை ஸ்கிரிப்டே கொடுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு அவர்கள் கொடுத்துள்ள இந்த பதிவிற்கு வெட்கப்படுவதாக நடிகர் செந்திலின் கிளிப்பிங்கை பதிலாக கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு. இதையடுத்து அர்ச்சனா கல்பாத்தியும் இதுதான் உங்க VCU-வா என்று கலாய்த்துள்ளார்.

வெங்கட்பிரபு விளக்கம்: இதையடுத்து மீண்டும் பதிலளித்துள்ள வெங்கட் பிரபு, இது ஒரு நல்ல கேள்வி, சரியான கேள்வி என்று கூறியுள்ளார். மேலும் என்ன பிரச்சினைன்னா, கரெக்ஷன் சொல்ல மாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க என்று தெரிவித்துள்ளார். அப்படி சொன்னால் ஆபீஸ்ல ஸ்கிரிப்ட் எங்க இருக்குன்னு சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்கிரிப்ட் எப்பவோ ரெடி என்றும் முதல் ஷெட்யூலே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ள வெங்கட் பிரபு, என்ன அட்மீன் என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்பார்ப்பில் தளபதி 68: எப்போதும் தன்னுடைய கேங்குடன் இணைந்து கலாட்டாவாக படத்தை எடுப்பவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து மன்மத லீலை படத்தையும் கொடுத்திருந்தார். முன்னதாக அஜித்தின் மங்காத்தா என்ற ப்ளாக்பஸ்டர் படத்தையும் கொடுத்திருந்தார். அந்தவகையில் தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











