twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியில் ரீ மேக் செய்ய அனுமதி பெறவில்லை.. இயக்குநர் ஷங்கருக்கு அந்நியன் பட தயாரிப்பாளர் நோட்டீஸ்!

    |

    சென்னை: அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    கோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர்.

    மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த படம்… அதர்வாவின் தம்பி ஹீரோவாகிறார் !மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த படம்… அதர்வாவின் தம்பி ஹீரோவாகிறார் !

    முதல்வன், சிவாஜி, எந்திரன், எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஷங்கர். கடைசியாக கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார்.

    படப்பிடிப்பு நிறுத்தம்

    படப்பிடிப்பு நிறுத்தம்

    இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்நியன் இந்தி ரீமேக்

    அந்நியன் இந்தி ரீமேக்

    இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியில் இறங்கியுள்ளார். 2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் அந்நியன். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் ஆகிய கேரக்டர்களில் நடித்திருந்தார்.

    ரன்வீர் சிங் லீடிங்

    ரன்வீர் சிங் லீடிங்

    அவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும் விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் ரன்வீர் சிங் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளார்.

    ஷங்கருக்கு நோட்டீஸ்

    ஷங்கருக்கு நோட்டீஸ்

    இந்நிலையில் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கருக்கு அப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எழுத்தாளர் சுஜாதா எழுதிய அந்நியன் பட கதையின் உரிமையை பணம் கொடுத்து தான் வாங்கிவிட்டதாக கூறியுள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

    சட்ட விரோதம்

    சட்ட விரோதம்

    தனது அனுமதியின்றி அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது சட்ட விரோதம் என கூறி இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பென் ஸ்டுடியோ தயாரிப்பாளருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    English summary
    Producer Oscar Ravichandran issues notice to Director Shankar for remaking Anniyan in Hindi. Shankar remakes Anniyan movie in Hindi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X