Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரபல தயாரிப்பாளர், நடிகர் நெஞ்சுவலியால் காலமானார்!
Recommended Video
சென்னை : தயாரிப்பாளர் பட்டியல் சேகர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. இவர் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை ஆவார். 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் பட்டியல் சேகர்.
பரத், ஆர்யா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த படம் 'பட்டியல்' படத்தை சேகர் தயாரித்தார். அதன்பின்னர் பட்டியல் சேகர் என்ற பெயரில் வலம் வந்த இவர் 'கழுகு', 'அலிபாபா' ஆகிய படங்களையும் தயாரித்தார்.
கடந்த ஒருவாரமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சேகர், சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 7.30 மணியளவில் திடீரென சேகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.