கமல்ஹாசனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய.. பிரபல தயாரிப்பாளர் மரணம்..இன்று இறுதிச்சடங்கு!

By

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளாரும் இயக்குனருமான ரகுநாதன் சென்னையில் நேற்று காலமானார்.

நடிகர் கமல்ஹாசனை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் இவர். இவர் தயாரித்த, பட்டாம்பூச்சி படம் மூலம்தான் கமல் ஹீரோவானார்.

producer Raghunathan passes away

1974 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தை தனது ஶ்ரீபிரகாஷ் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்த ரகுநாதன், இந்தப் படத்தில் இயக்குனர் ஏ.எஸ்.பிரகாசம் மற்றும் இசை அமைப்பாளர் உட்பட சிலரை அறிமுகம் செய்தார். பல்வேறு டெக்னீஷியன்களை அறிமுகம் செய்துள்ள இவர், வரப்பிரசாதம், நீ வாழ வேண்டும், அக்னிபிரவேசம், ஒத்தையடி பாதை, தாம்பத்யம் ஒரு சங்கீதம் உட்பட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். சுபமுகூர்த்தம் உட்பட நான்கு படங்களை இயக்கியும் உள்ளார்.

கடைசியாக மரகதக்காடு என்று படத்தை தயாரித்துள்ளார். மங்களேஷ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது

கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த ரகுநாதன் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X