எல்லாத்துக்கும் காரணம் 2 நடிகர்கள்தான்.. கூடவே இருந்து விஷாலை காலி பண்ணிட்டாங்க.. தயாரிப்பாளர் வேதனை

சென்னை: நடிகர் விஷால் குறித்த பேச்சுதான் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக உள்ளது. வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள மதகஜராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் விஷால் கலந்து கொண்டார். அப்போது அவரால் மைக்கைப் பிடித்துப் பேசமுடியவில்லை. அவரது கை நடுக்கத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் நடுக்கமே ஏற்பட்டது. இப்படியான நிலையில் விஷாலின் இந்த நிலைக்கு காரணம் இரண்டு நடிகர்கள்தான் என தயாரிப்பாளர் ராஜா தெரிவித்துள்ள கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், " விஷால் உண்மையாலுமே நல்ல மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர். ஆனால் அவரது இந்த நிலைமைக்கு காரணம், நண்பர்கள் என கூடவே இருந்து, முதுகில் குத்திய துரோகிகள்தான். நாங்கள் முதலில் அவர்களைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். காரணம் விஷாலைச் சுற்றி அவர்கள் எப்போதும் இருந்தார்கள். யாரையும் எளிதில் விடமாட்டார்கள். அப்படி இருக்கும்போது, அவற்றைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், விஷாலின் இந்த நிலைக்கு காரணமே நண்பர்கள் என்ற போர்வையில் விஷாலின் முதுகில் பயணித்து, அவரை முதுகில் குத்திய இரண்டு துரோகிகள் தான்.

madha gaja raja vishal

விஷால் முதலமைச்சராகவே ஆகலாம், என பேசிய நீங்களும் உங்க அப்பாவும் எங்கே போனீர்கள். விஷாலின் இந்த நிலைமைக்கு நீங்களும் ஒரு காரணம். அவன் இவன் படம், ஒரு ஆரம்பப் புள்ளிதான். ஆனால், அதன் பின்னர் நடந்தது? ஒரு பெரிய தொகை குறித்து கணக்கு கேட்டபோது அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். நீங்கள் துரோகிகள், விஷாலின் முதுகில் குத்திய துரோகிகள். அன்றைக்கு அவ்வளவு பெரிய பணம் இருந்திருந்தால், அவரது பிரச்னைகள் தீர்ந்திருக்கும். நண்பன் என்பதால்தான், பணமே வாங்காமல் நடித்தார்.

ஏமாற்றம்: மேலும், அந்தப் பணத்தை கேட்காமல் விட்டதற்கு காரணமே, அது சேமிப்பாக இருக்கட்டும் என்பதுதான். மேலும் அந்த பணத்தை விஷால் கேட்கும்போது, தன்னிடம் பணம் இல்லை, பிறகு தருகின்றேன் என்றுகூட சொல்லி இருக்கலாம். அதேநேரத்தில் அந்தப் படத்தின் மூலம், நஷ்டம் ஏற்பட்டிருந்தால், சம்பளத்தை விட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டார். ஆனால் நீங்க ஏமாத்திட்டு போயிட்டீங்க. கடவுள் மன்னிக்கவே மாட்டார்.

துரோகிகள்: விஷாலைப் பொருத்தவரை பணம் பெரிதல்ல. ஆனால் அவரை முதுகில் குத்தியவர்களை துரோகிகளை விஷால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். கேப்டன் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ இணையத்தில் இப்போதும் உள்ளது. அதனைப் பாருங்கள், ஒரு நடிகர் விஷாலை தொடர்புகொள்ள முயற்சி செய்தார் என்பதைப் பார்க்கலாம். ஆனால் விஷால் அந்த நடிகரை புறக்கணித்துக் கொண்டே இருந்தார். விஷால் அவர்களை ஆத்மார்த்தமாக நம்பினார். ஆனால், அவர்கள் விஷாலுக்கு துரோகம் செய்துவிட்டார்கள்.

முகத்திரை: பிரச்னையை கையாள்வது என்பது விஷாலுக்கு கைவந்த கலை. ஆனால் நண்பன் துரோகியாக மாறும்போது ஒரு நடுக்கம் வரும் இல்லையா? விஷாலுக்கு ஏற்பட்ட வலி, எனக்கு ஏற்பட்ட வலி. நான் கட்டாயம் அவர்களின் முகத்திரையைக் கிழிப்பேன். விஷாலிடம் இதுதொடர்பாக பேசிவிட்டு நான் அவர்களின் முகத்திரையைக் கிழிப்பேன்" என பேசினார். மேலும் இந்தப் பேட்டியின் தொடக்கத்தில் தொகுப்பாளர், சமூக ஊடகங்களில் விஷாலின் இந்த நிலைக்கு காரணம் நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா என பலரும் பதிவிடுகின்றார்கள் என்ற கேள்வியை முன்வைத்தார். பதில் அளித்த தயாரிப்பாளர் ராஜா யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X