இதெல்லாம் ஒரு காமெடியா... ? - சந்தானத்தைக் காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

By Shankar

சென்னை: என்றென்றும் புன்னகை காமெடி விவகாரம் இந்த அளவு பூமராங் ஆகும் என சந்தானமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.

'அஞ்சு பத்து'க்குப் போறேன், என்று சொல்லும் அலுவலக பெண் ஊழியரை இரட்டை அர்த்தத்தில் ஏன் நீ நல்லாதானே இருக்க.. ஐநூறு ஆயிரத்துக்கே போலாமே என்ற சந்தானத்தின் வசனம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜன்

ராஜன்

விழா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ராஜன், "அப்போல்லாம் பாரதிராஜா போன்றவர்கள் படம் எடுத்தாங்க. வக்கிரமில்லாத படங்கள் அவை.

ஆனா இப்ப... வீட்ல தாய்மார்களும் மகள்களும் பார்க்கவே கூச்சப்படும் அளவுக்கு கேவலமா இருக்கு காட்சிகள்.

இதுக்குப் பேரு காமெடியா?

இதுக்குப் பேரு காமெடியா?

ஒரு படத்து ட்ரைலர்ல, அஞ்சு மணி பத்து நிமிஷத்துக்கு வீட்டுக்குப் போகணும்னு பர்மிஷன் கேட்கிற ஒரு பெண்ணைப் பார்த்து, நீதான் நல்லாருக்கியே ஐநூறு ஆயிரத்துக்கே போலாமே என்று கேட்கிறான் ஒருத்தன். நீ என்ன பிஸினஸ் பண்றே? இதுக்குப் பேரு காமெடியா? இதனால் உனக்கு என்ன கிடைச்சிடப் போகுது... அசிங்கம்.

குடிக்கிற சீன்

குடிக்கிற சீன்

இப்போ ரிலீசாகிற எல்லாப் படத்திலேயும் ஒரு சீனாவது குடிக்கிற மாதிரி வைக்கிறாங்க. வக்கிரமாத்தான் எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டே எடுக்கறாங்க. எல்லா நடிகர்களையும் ரசிகர்கள் ஃபாலோ பண்றாங்க. ஒருத்தரை ‘தல'ங்கிறாங்க, இன்னொருத்தரை தளபதிங்கிறாங்க... நடிகர்கள் திரையில என்ன செஞ்சாலும் ரசிகர்கள் அப்படியே எடுத்துக்கிறாங்க.

அப்படியிருக்கும் போது ஹீரோக்கள் படத்துல எப்போ பார்த்தாலும் குடிக்கிற மாதிரியே நடிச்சா அதைப் பார்க்கிற ரசிகனும் அந்த மாதிரி செய்ய மாட்டானா?," என்றார்.

பெண்கள் மத்தியில் எதிர்ப்பு

பெண்கள் மத்தியில் எதிர்ப்பு

ஏற்கெனவே சந்தானத்தின் இந்த குறிப்பிட்ட காமெடிக்கு, சினிமா ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்போது திரைத்துறையைச் சேர்ந்தவர்களே வெளிப்படையாக திட்ட ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X