ஸ்ரீரெட்டியை விளாசிய தயாரிப்பாளர், சப்போர்ட் பண்ண பா. ரஞ்சித்: 'பற' விழாவில் பரபரப்பு
Recommended Video
சென்னை: பலர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீரெட்டியை தயாரிப்பாளர் கே. ராஜன் கிண்டல் செய்தபோது அதற்கு இயக்குநர் பா. ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்தார்.
கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள பற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா. ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகை ஸ்ரீரெட்டியை கிண்டல் செய்தார்.

ஸ்ரீரெட்டி
சமீபகாலமாக ஆன்லைனில் பெண்களும் ஒரு தவறை செய்கிறார்கள். பெரிய ஆளுங்களை டச் பண்ண முடியாவிட்டாலும் அவர்களை பற்றி தவறாக ஏதாவது சொல்லி இமேஜை டேமேஜ் செய்கிறார்கள். இதை ஆரம்பித்து வைத்தது ஸ்ரீரெட்டி. அவர் ஒழுக்கம் தவறாத ஆந்திர கண்ணகி என்று ராஜன் கிண்டலாக பேசினார்.

இயக்குநர்
அந்த இயக்குநர் என்னை கூப்பிட்டார், இந்த இயக்குநர் கூப்பிட்டார் என்று ஸ்ரீரெட்டி கூறினார். நீ எத்தனை பேரை கூப்பிட்ட? என்று ராஜன் பேசுவதை கேட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் சங்கடத்தில் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

வைரமுத்து
குஷ்பு ஒருவனை அடித்துள்ளார். அது சரி. பெண்களிடம் தவறாக நடந்தால் கண்டிப்பாக அடிக்கணும். ஆனால் அந்த அடிப்பையில் ஒரு பெண் வைரமுத்துவை பற்றி தரக்குறைவாக பேசியிருக்கு. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் வரிசையில் தமிழைக் காக்கும் வைரமுத்துவை பற்றி அப்படி பேசுவது தவறு. கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்த அவரை சின்ன ஆசைக்காக சிதைக்கிறீங்களே என்று ராஜன் பேசினார்.

பா. ரஞ்சித்
ராஜன் ஸ்ரீரெட்டி மற்றும் வைரமுத்து மீது புகார் தெரிவித்த பெண்ணை தரக்குறைவாக பேசியதை பா. ரஞ்சித்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலியல் புகார் தெரிவித்தால் அந்த பெண்களை குற்றவாளிகளாக பார்க்கக் கூடாது. அந்த புகார் குறித்து விசாரித்தால் தானே உண்மையா, இல்லையா என்பது தெரிய வரும் என்று பேசினார் ரஞ்சித். மேடையில் நடந்த இந்த கருத்து மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











