எனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல தயாரிப்பாளர் அதிரடி!

சென்னை: நடிகை வனிதா தன்னுடைய உடலமைப் வைத்து பாடி ஷேமிங் செய்ததாக பிரபல தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

இது என்னோட வாழ்க்கை Vanitha producer Ravinder க்கு பதிலடி

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

இதனை அறிந்த அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டதாக போலீஸில் புகார் அளித்தார்.

பிரபலங்கள் கருத்து

பிரபலங்கள் கருத்து

இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் பேசு பொருளானது. பீட்டர் பாலுடனான வனிதாவின் மூன்றாவது திருமணத்தை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோரும் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் ரவீந்திரன்

தயாரிப்பாளர் ரவீந்திரன்

தன்னுடைய திருமணம் பற்றி பேசிய அனைவரையும் விளாசி தள்ளினார் வனிதா. அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர், பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசினார். வனிதா சட்டப்படி திருமணம் செய்யவில்லை.

மிரட்டிய வனிதா

மிரட்டிய வனிதா

இதனால் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக தான் நிற்கபோவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, தயாரிப்பாளர் ரவீந்திரனை கடுமையாக சாடினார். அதோடு தனது தனிப்பட்ட விஷயம் குறித்து பேசிய ரவீந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என போனில் மிரட்டினார்.

பாடி ஷேமிங்

பாடி ஷேமிங்

அந்த ஆடியோக்கள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை வனிதா தனது உடலமைப்பை வைத்து தன்னை கேலி செய்ததாக கூறியுள்ளார் ரவீந்திரன். தன்னிடம் போனில் பேசியபோது தனது உடல் அமைப்பு குறித்து கேலி செய்தார் என்று கூறியுள்ளார் ரவீந்திரன்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

இதற்காக வனிதா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். தான் வனிதாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ள ரவீந்திரன், ஹெலனுக்கு ஆதரவாக நிற்கபோவதாகவும், வனிதா சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் என்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியுள்ளார்.

ஒன்னும் செய்ய முடியாது

ஒன்னும் செய்ய முடியாது

இதனிடையே தனது பதிவு திருமணத்திற்கான மோதிரங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த வனிதா, எங்களின் காதல் எப்போதும் குறையாது. எங்களின் கடைசி மூச்சு வரை இந்த காதல் தொடரும். சட்டமோ அல்லது டிராமா ட்ரூப்போ ஒன்னும் செய்ய முடியாது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X