எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும்.. ரவீந்தர் -மகாலட்சுமி கோயில் விசிட்!

சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் கோயிலில் எளிமையாக திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களது திருமணம் எளிமையாக நடந்தாலும் அதற்கு மேல் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே மீடியா உலகில் பரபரப்பை ஏற்படுத்தின.

இவர்களது திருமணம் பேசுபொருளாக மாறிய நிலையில், அதிகமான விமர்சனங்களை இருவரும் சந்தித்தனர். அனைத்தையும் பொறுமையாக அணுகினர்.

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்ற நிலையில், சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக கோயிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்

இந்தத் திருமணத்தையொட்டி சில படங்களை தனது சமூக வவைதளப்பக்கத்தில் ரவீந்தர் பகிர்ந்த நிலையில், மீடியாவின் வெளிச்சம் இந்த ஜோடியின்மீது படர்ந்தது. தொடர்ந்து இவர்களின் திருமணம் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தரை காசுக்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

அதிகமான விமர்சனங்கள்

அதிகமான விமர்சனங்கள்

இந்த விமர்சனங்களை எல்லாம் இந்த ஜோடி மிகவும் பொறுமையாக எதிர்கொண்டது. இவர்களது திருமணம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையிலும், இவர்கள் இன்னமும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜோடியாகவே உள்ளனர். இவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இவர்களை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தைப்பூசத் திருவிழா

தைப்பூசத் திருவிழா

இதனிடையே, சமூக வலைதளங்களில் தாங்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை இவர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். தங்களின் சுக துக்கங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தை பூசத்தையொட்டி இன்றைய தினம் இருவரும் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

முருகனிடம் வேண்டுதல்

முருகனிடம் வேண்டுதல்

கோயிலின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்களின் இன்ஸ்டாகிராமில் இருவரும் பகிர்ந்துள்ளனர். மேலும் தாங்கள் நேசிக்கும் உறவுகளுக்காக மட்டுமில்லாமல் தங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் சாமியிடம் வேண்டிக் கொண்டதாகவும் இந்த ஜோடி கேப்ஷனில் தெரிவித்துள்ளது. முருகன் இருக்க பயமேன் என்றும் குறிப்பிட்டுள்ளது.

விரைவில் சீரியல் தயாரிப்பு

விரைவில் சீரியல் தயாரிப்பு

தற்போது சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மகாலட்சுமி. இவர் விரைவில் சின்னத்திரை சீரியல்களை தயாரிக்கவுள்ளதாகவும் ரவீந்தருக்கு அவரது தயாரிப்புப் பணிகளில் உதவி செய்யவுள்ளதாகவும் விரைவில் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X