6 மாத திருமண நாள் கொண்டாட்டம்.. க்யூட் பதிவை வெளியிட்ட ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி!

சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் கோயிலில் எளிமையாக திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்த ஜோடி நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடியை காட்டிலும் அதிகமான புகழை தொடர்ந்து பெற்றது.

இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி தற்போது 6 மாதங்கள் கடந்துள்ளதை இவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி

நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் ரெசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணத்தை முடித்தனர் நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்களது திருமணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி


இவர்களது திருமணத்தை காட்டிலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் திருமணம். இவர்களது திருமணம் எளிமையான அளவில் கோயிலில் குறைவான அளவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்றது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. காசுக்காகத்தான் மகாலட்சுமி, ரவீந்தரை திருமணம் செய்தார் என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த விமர்சனங்களை சிறப்பான வகையில் இந்த ஜோடி எதிர்கொண்ட நிலையில், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் பதிவுகள்

இன்ஸ்டாகிராம் பதிவுகள்

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை இந்த ஜோடி கவர்ந்து வருகிறது. மேலும் இவர்களுக்கு பாலோயர்களும் கிடைத்துள்ளனர். இவர்களுடைய பதிவுகளுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கிடைத்து வருகிறது.

6 மாத திருமண நாள் கொண்டாட்டம்

6 மாத திருமண நாள் கொண்டாட்டம்

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ளதாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தனித்தனியாக இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சிப்பதிவை வெளியிட்டுள்ளனர். தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளதாகவும் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் மாற்றியுள்ளதாகவும் மகாலட்சுமி தன்னுடைய கணவர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

மேலும் 6வது மாத திருமண நாள் வாழ்த்துக்கள் என்றும் தன்னுடைய பேபி மற்றும் தன்னுடைய அனைத்துமானவர் என்றும் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார். இதே பதிவை ரவீந்தரும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவர்களது இந்தப் பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X