ஜெயிலுக்கு அனுப்பிய ஒருத்தரையும் விடமாட்டேன்.. என்னிடம் ஆதாரம் இருக்கு.. கண்கலங்கிய ரவீந்திரன்!

சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், என்னை ஜெயிலுக்கு அனுப்பிய ஒருத்தரையும் விடமாட்டேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரவீந்திரன் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

Producer Ravindar Chandrasekaran emotional Interview

தயாரிப்பாளர் ரவீந்திரன் கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இந்த நேரம் எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களின் காதல் கதை தான் ஓடிக்கொண்டு இருந்தது.

தயாரிப்பாளர் ரவீந்திரன்: சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில்: ரவீந்தர் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை ரவீந்தர் சந்திரசேகர் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

மோசடி செய்தேனா: ஜாமீனில் வெளியில் வந்த ரவீந்திரன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நடிகர் சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை தயாரித்த பாலாஜி தான் தன் மீது வழக்கு கொடுத்துள்ளார். அவர் எனக்கு எப்படி அறிமுகப்படுத்தியதே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி மற்றும் அவரின் நண்பர்கள் மூலமாக எனக்கு அறிமுகமானவர் தான் பாலாஜி கப்பா. அதை அவரே தனது புகார் மனுவில் தேனாண்டாள் முரளி மூலமாக அறிமுகமானார் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

Producer Ravindar Chandrasekaran emotional Interview

ஆதாரம் உள்ளது: அவர் எதற்காக வந்தார்,என் அலுவலகத்தில் என்ன பேசினோம் என்பதற்கான தெளிவான சிசிடிவி ஆதாரம் என்னிடம் இருக்கு, அவர் எதற்காக என்னிடம் பணத்தை கொடுத்தார். அதனால், என்ன நடந்தது என்று எல்லா ஆதரமும் என்னிடம் உள்ளது. இது சம்மந்தமான வழக்குஇப்போது நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து மேலும் என்னால் என் தகவலையும் சொல்ல முடியாது.

யாரையும் விடமாட்டேன்: மேலும், என்னுடைய அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது. ஹேட்டர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், என்னை ஜெயிலுக்கு அனுப்பிய ஒருத்தரையும் விடமாட்டேன் என கண்ணீருடன் ரவீந்திரன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X