மகாலட்சுமியைப் பார்த்தா கல்ல விட்டு அடிக்கனும்..நேரலையில் பேசிய ரவீந்தர்!
சென்னை : மகாலட்சுமியை பார்த்தா கல்ல விட்டு அடிக்கனும் என்று நேரலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் பேசியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன், சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். ஒரு சில திரைப்படங்களை விநியோகமும் செய்து இருக்கிறார்.
இவர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை பார்த்த 90ஸ் கிட்டுகள் சோகத்தில் மூழ்கி பலவிதமான கமெண்டுகளை பதிவு செய்தனர். வருகின்றனர்.

ரவீந்தர், மகாலட்சுமி
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திடீர் திருமணத்தால் எழுந்த சர்ச்சை எழுந்ததை அடுத்து, பல ஊடகங்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அதில், நாங்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தோம் இதனால் இது திடீர் திருமணம் இல்லை, நிதானமாக யோசித்து நடந்த திருமணம் என்றார். அதே போல, மகாலட்சுமி என்னை எந்த கட்டாயத்தின் பேரிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார்.

நேரலையில்
மேலும், இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய ரவீந்திரன், எங்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் இணையத்தில் பெரிய அளவில் ட்ரோல் ஆனது. அதனால் தான் நாங்கள் பல பேட்டி கொடுத்தோம். இனி எங்களது பேட்டி தொல்லை இருக்காது, நாங்கள் சந்தோஷமா எங்களது வாழ்க்கையை வாழபோகிறோம் என்றார். அப்போது, பலர் மகாலட்சுமியை பேசும் படி கேட்க, என் பொண்டாட்டி வெட்கப்படுகிறாள்..கேமராவுக்கு முன்னாடி வர மாட்டியா? ரசிகர்கள் கேட்கிறார்கள் வந்து பேசு என்றார். அப்போது, அவர் நேரலைக்கு வரமறுக்கவே.

கல்ல விட்டு அடிங்கனு
நீ இப்படி எல்லாம் பண்ணாயாரும் அன்பே வா சீரியல் யாரும் பாக்கமாட்டாங்க.. சீரியல்ல மகாலட்சுமி வந்தாங்கனா கல்ல விட்டு அடிங்கனு நானே சொல்வேன். கொன்னுடவேன் ஜாக்கிரதை என்ற ரவீந்திரன், அது மட்டும் இல்லுங்க மகாலட்சமி கன்டிஷன் போட்டு என்னை அன்பே வா சீரியலை பார்க்க வைத்துவிட்டாள். ஒரு திருமணத்திற்கு இந்த அளவு பரபரப்பா பேசுற அளவுக்கு, இது நாட்டுக்கு தேவையான திருமணம் இல்லை என்றார்.

உருவகேலி செய்யாதீர்கள்
இதையடுத்து, நேரலையில் பேசிய மகாலட்சுமி, என்னை பற்றி பலவிதமான கருத்துக்கள் வருகிறது, அதுக்கூட பரவாயில்லை, ஆனால்,என் கணவரை உருவகேலி செய்வது கஷ்டமா இருக்கு தயவுசெய்து, அவரை உருவகேலி செய்யாதீர்கள், என்னை பற்றி எண்ண வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்றார் மகாலட்சுமி. தற்போது இந்த ஜோடி திருச்சியில் குலதெய்வ கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











