நிலைமை சரியான பிறகு லிப்ட் படத்தின் அப்டேட்… தயாரிப்பாளர் ட்விட் !

சென்னை : லிப்ட் திரைப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கவின், பிகில் படத்தின் மூலம் பிரபலமான அமிர்தா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நடிகர் நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். ஹேப்சி தயாரித்துள்ளார்.

பிக்பாஸில் பிரபலமானார்

பிக்பாஸில் பிரபலமானார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் பிரபலமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தவர் கவின். இவர், நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அம்ரிதா ஐயர்

அம்ரிதா ஐயர்

டிகர் கவின் தற்போது, இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், சிவகார்த்திகேயன் பாடிய இன்னா மயிலு என்ற பாடல் இணையத்தில் வைரலானது.

லிப்ட் அப்டேட்

லிப்ட் அப்டேட்

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் மிகவும் அமைதியாக இருக்கிறோம். இப்போது, பாடலையோ, டிரைலரையோ வெளியிட்டால் பழையதாகி விடும் என்பதால் வெளியிடாமல் இருக்கிறோம் என்றார்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்

தாமதத்திற்கு மன்னிக்கவும்

லிப்ட் திரைப்படத்திலிருந்து மிரட்டலான டிரைலர் தயாராக உள்ளது. நிலைமை சரியான பிறகு நிச்சயம் வெளிவரும் தாமதற்திற்கு மன்னிக்கவும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால், திரையரங்குகள் திறப்பு குறித்து வெளியானவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு செய்தி வெளியாகும் என நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X