வெறுப்பவர்களையும் நேசிக்க வைப்போம்.. குலதெய்வம் கோயிலில் ரவீந்தர் -மகாலட்சுமி வழிபாடு!

சென்னை : பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டார்.

இதையடுத்து இந்த திருமணம் குறித்த பல்வேறு விமர்சனங்களுடன் இந்த தம்பதியை பலரும் வைத்து செய்து வருகின்றனர்.

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இந்த திருமணத்தை, தன்னுடைய திருமண புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் ரவீந்தர் போஸ்ட் செய்திருந்தார்.

பணத்திற்காக திருமணமா?

பணத்திற்காக திருமணமா?

அவருக்கும் மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம். இந்த திருமணம் குறித்த தகவல் தெரிந்தவுடன் இருவரையும் பலரும் வைத்து செய்தனர். பணத்திற்காகவே ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்ததாக பலரும் விமர்சித்தனர். சீரியல்களில் நடித்துவரும் மகாலட்சுமி தான் மற்றவர்களுக்கு உதவும் வகையில் சம்பாதிப்பதாகவும் பணம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் பேட்டிகளில் கதறாத குறைதான்.

ஆத்திரப்பட்ட வனிதா விஜயகுமார்

ஆத்திரப்பட்ட வனிதா விஜயகுமார்

ஆனாலும் அவரது வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர் விமர்சனங்களை இந்த ஜோடி மீது வைத்து வருகின்றனர். இதனிடையே நடிகை வனிதா விஜயகுமாரும் இவர்களது திருமணம், கர்மாவின்படி விளைவுகளை சந்திக்கும் என்று சாபம் விடாத குறையாக பேசினார்.

வனிதாவிற்கு பதிலடி

வனிதாவிற்கு பதிலடி

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய ரவீந்தர் இதற்கும் பதிலடி கொடுத்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய மனைவி நடித்து வரும் சீரியல் குறித்தும் நகைச்சுவையுடன், இந்த சீரியல்களை பார்த்திருந்தால் அவரை விவாகரத்து செய்திருப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த விமர்சனம் ரசிகர்களை யோசிக்க செய்தது.

குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாடு

இந்நிலையில் தனி விமானம் மூலம் ஹனிமூன் செல்லவுள்ளதாக குறிப்பிட்டு, பின்பு குலதெய்வம் கோயிலுக்குதாங்க போறோம் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

குலம் செழிக்க வந்தவள்

குலம் செழிக்க வந்தவள்

இந்நிலையில் தன்னுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்ற இந்த தம்பதி, அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. மேலும் தன்னுடைய குலம் செழிக்க வந்தவள் மகாலட்சுமி என்றும், இனி வாழ்க்கையை குல தெய்வத்தின் அருளோடு துவங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெறுக்கும் உலகத்திற்கு நன்றி

வெறுக்கும் உலகத்திற்கு நன்றி

மேலும் நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி என்றும் நம்மை வெறுக்கும் உலகத்திற்கு மிக்க நன்றி என்றும் கூறியுள்ள ரவீந்தர், ஒருநாள் அவர்களையும் தாங்கள் நேசிக்க வைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முடிக்கையில் ரவி மற்றும் மிஸஸ் ரவி என்று முடித்துள்ளார்.

மகாலட்சுமி வேண்டுகோள்

மகாலட்சுமி வேண்டுகோள்

தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவரும் பலருக்கும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி. தன்னுடைய கணவனை தான் விரும்பியே திருமணம் செய்ததாகவும் அவரை பாடி ஷேமிங் செய்ய வேண்டாம் என்று மகாலட்சுமி முன்னதாக ஒரு பேட்டியில் கோரிக்கை விடுத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X