என்னவள் வந்தால் அவள் விழி தந்தால்.. மனைவி குறித்து ரவீந்தர் உருக்கம்!
சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் எளிமையாக கோயிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்களது திருமணம் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களை தந்த நிலையில், அவற்றை பொறுமையாக எதிர்கொண்டது இந்த ஜோடி.
தற்போது திருமண வாழ்வில் 6 மாதங்களை கடந்துள்ள இந்த ஜோடி, தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிர்ந்து வருகிறது.

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் கோயிலில் எளிமையாக தங்களது திருமணத்தை செய்துக் கொண்டனர். நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்ற இந்த திருமணத்தை தன்னுடைய சமூக வலைதளத்தின்மூலம் அறிவித்தார் ரவீந்தர். மகாலட்சுமியே தன்னுடைய வாழ்க்கையில் துணையாக வந்துவிட்டதாக பூரித்தார். அப்போது துவங்கிய இவர்களது திருமணம் குறித்த சர்ச்சை பல மாதங்கள் தொடர்ந்தது.

6 மாதங்களை கடந்த திருமணம்
இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். மகாலட்சுமிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், பணத்திற்கு ஆசைப்பட்டே ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அவற்றிற்கு எல்லாம் இந்த ஜோடி மிகவும் பொறுமையாக பதிலளித்தது. தற்போது இவர்களது திருமணம் முடிந்து 6 மாதங்களை கடந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது இந்த ஜோடி.

அடுத்தக்கட்டத்திற்கு நகரும் மகாலட்சுமி
தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்துவரும் மகாலட்சுமி, அந்த கமிட்மெண்ட்களை முடித்துக் கொண்டு, சீரியல் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தன்னுடைய கணவரின் தயாரிப்புப் பணியிலும் மகாலட்சுமி ஈடுபட உள்ளாராம். இதனிடையே சமூக வலைதளங்களில் இருவரும் மிகவும் ஆக்டிவாக தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை போட்டு அதிகமான பாலோயர்களையும் பெற்றுள்ளனர்.

மனைவியுடன் கோயில் விசிட்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது வீட்டில் நடைபெற்ற ஹோமத்தின் வீடியோவையும் ரவீந்தர் பகிர்ந்திருந்தார். மற்றவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த ஹோமத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது கோயிலுக்கு மனைவி மகாலட்சுமியுடன் சென்று அந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரவீந்தர். மேலும் வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை, வழி இல்லாமலும் வாழ்க்கை இல்லை என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

என்னவள் வந்தால் விழி தந்தால்!
திடீரென என்னவள் வந்தால் விழி தந்தால் என கவிதையும் பாடியுள்ளார். மேலும் தன்னுடைய நான்சென்ஸ் அனைத்தையும் மகாலட்சுமி பொறுத்துக் கொள்ள மாட்டாள் என்றும் ஆனால் அவளுடைய அன்பு அனைத்தையும் மாற்றும் தன்மை கொண்டது என்பதை மகாலட்சுமி நிரூபித்துள்ளதாகவும் ரவீந்தர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள மகாலட்சுமி, லவ் யூ மோர் என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











