நான் நல்லா இருக்கேன் யாரு சொன்ன கதை இதெல்லாம்? கடுப்பான ரவீந்தர்!
சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, ரவீந்தர் நான் நல்லா இருக்கேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்.
நடிகை மகாலட்சுமி, சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு வயதில் மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

செப்டம்பரில் திருமணம்
கடந்த செப்டம்பர் மாதம் 1ந் தேதி திருப்பதியில் ரவீந்தர் மகாலட்சுமிக்கு மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது. தயாரிப்பாளர் ரவீந்தர் திருமண புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த பிறகு தான் இவர்களது திருமண விஷயமே வெளியில் தெரிந்தது. இதையடுத்து, இணையமே திணறும் அளவுக்கு இவர்கள் பற்றிய செய்தி பரவியது.

இரண்டு வருட காதல்
இவர்களின் திருமண செய்தி வைரலானதை அடுத்து, இருவரும் யூடியூப் சேனல், செய்தி சேனல், தொலைக்காட்சி என அனைத்துக்கும் வலைத்து வலைத்து பேட்டி கொடுத்து வந்தனர். நாங்கள் திடீரென திருமணம் செய்து கொள்ளவில்லை, இரண்டு வருடமாக காதலித்து வருகிறோம் இதனால் இப்போது திருமணம் செய்துகொள்கிறோம் என்றார்.

விஷமிகள் செய்த வேலை
அது மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐ லவ்யூ பொண்டாட்டி என்பதும், ஐ லவ் யூ புருஷா என்பதும், முத்தம் கொடுக்கும் போட்டோவையும் பார்த்து கடுப்பாக இருந்த யாரோ ஒரு சில விஷமிகள், இணையத்தில் ரவீந்தர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதை செய்தியை பரப்பினர். இதனால், ரசிகர்கள் பலர் பதறிப்போனார்கள்.

நான் நல்லா இருக்கிறேன்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது மனைவி மகாலட்சுமியுடன் பட்டாசு வெடித்து தல தீபாவளி கொண்டாடிய வீடியோவை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நான் நல்லா இருக்கிறேன் யார் சொன்னது நான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், என்ன நேசிக்கிற ஒருத்தி என்ன சுத்தி சுத்தி வர ஒவ்வொரு நாளும் எனக்கு தீபாவளிதான். ஆனா இன்னைக்கு எனக்கு தல தீபாவளி. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க..சந்தோஷமா இருப்போம். என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











