காசுக்காக மகாலட்சுமி என்னை கல்யாணம் பண்ணிக்கல..கட்டில் மட்டும் வாழ்க்கை இல்ல..ரவீந்திரன் நச் பதில்!
சென்னை : காசுக்காக மகாலட்சுமி என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மிகவும் ரகசியமாக இவர்களது திருமணம் நடந்தது. இன்ஸ்டாகிராம் திருமண புகைப்படத்தை இவர்கள் ஷேர் செய்த பின்பே இவர்களுக்கு திருமணமான செய்தி அனைவருக்கும் தெரிந்தது.

ரவீந்திரன்,மகாலட்சுமி
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒருவாரமாகிவிட்ட நிலையிலும், ஹாட் டாப்பிக் இவர்களில் திருமணம் பற்றிதான் பேச்சாக உள்ளது. இந்த இளம் ஜோடியும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஜாலியா வெளிநாட்டுக்கு ஹனிமூன் போவாங்கனும் பார்த்தா, மகாபலிபுரத்திலேயே ஹனிமூன் கொண்டாடி விட்டு, அனைத்து ஊடகங்களுக்கும் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து வருகிறார்.

திருப்பதியில் நடித்த காரணம் இதுதான்
சமீபத்தில் இவர்கள் இருவரும் அளித்த பேட்டியில், திருமணத்தை ரகசியமாக செய்ய காரணம் என்ன என பலரும் கேள்விகேட்டு வருகிறார். அதற்கு பெரிய காரணம் எதுவுமே இல்லை. எங்கள் இருவருக்கும் மிகவும் ஆடம்பரமாக தடபுடலாக எப்படி எப்படி எல்லாம் திருமணம் நடக்கவேண்டும் என்று ஆசைபட்டோமோ அப்படி ஏற்கனவே திருமணம்நடந்து முடிந்து விட்டது. இப்போது, எங்களுக்கு என்று வாழ்க்கையை பற்றிய புரிதல் இருப்பதால், இரண்டாவது திருமணத்தை திருப்பதியில் செய்து கொண்டோம்.

2வது திருமணம் யாரும் செய்தது இல்லையா?
இரண்டவாது திருமணம் இதுவரை யாரும் செய்து கொண்டது இல்லையா, உச்சநட்சத்திரங்கள் முதல் பல பிரபலமான நடிகர்கள் வரை அனைவரும் இரண்டாவது திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்த்து இருக்கிறார்கள். ஆனால், எங்களது திருமணத்தை இப்படி வியந்து பார்க்கக்காரணம் என் உருவம் மட்டும் தான்.

பணத்திற்காக திருமணம்
இப்படி ஒரு அழகான பொண்ணு எப்படி, கொஞ்சம்கூட பொருத்தமே இல்லாத ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நான் வேற தயாரிப்பாளர் என்பதால், பணத்திற்காக நடந்த திருமணம் என்று பேசுகிறார்கள். பணத்திற்காகத்தான் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அது அரேஞ்ச் மேரேஜில் தான் நடக்கும் லவ் மேரேஜில் நடக்காது என்றார்.

கமெண்ட் போடுபவர்களுக்கு தெரியாது
அதுமட்டும் இல்லால் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்கும் பெண் நிச்சயமா பணத்திற்காக கல்யாணம் செய்து கொள்ளமாட்டாள். அதுபோல மகாலட்சுமி பணத்திற்காக என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் எப்படி, என் மனசு எப்படி என்பது கமெண்ட் போடுபவர்களும்,ட்ரோல் செய்பவர்களுக்கும் தெரியாது,என்னுடன் பழகியவர்களுக்குத்தான் தெரியும். மனசை பார்த்து வருவதுதான் காதல், கட்டில் மட்டும் வாழ்க்கை இல்ல என் தயாரிப்பாளர் நச்சுனு பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











