குடித்துவிட்டு பேட்டி கொடுத்தாரா வனிதா.. தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகை வனிதா குடிக்காமல் ரிவ்வியூ கொடுக்க வேண்டும் என்று சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்தார் வனிதா.

சூர்யா தேவி
இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். அடுத்தவர் கணவரை அபகரித்து கொண்டதாக யூடியூப் பிரபலமான சூர்யா தேவி ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வனிதாவை கழுவி ஊற்றினார்.

கடுப்பான வனிதா
இதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உதவினார். வனிதா பீட்டர் பால் திருமணம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். இதனால் கடுப்பான வனிதா ரவீந்தரை கிழித்து தொங்கவிட்டார்.

விமர்சன வீடியோக்கள்
அவர் மீது போலீஸிலும் புகார் அளித்தார். அப்போது முதலே இருவருக்கும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

மீண்டும் வீடியோ
தற்போது வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்தது குறித்தும் தயாரிப்பாளர் ரவீந்தர்தான் முதல் தகவலை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது வனிதா குறித்து பேசி மீண்டும் ஒரு வீடியோவை வெளிட்டுள்ளார் ரவீந்தர்.

செருப்பால் அடிப்பேன்
அதாவது, பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசிய பாலாஜியை திட்டி தீர்த்து வீடியோ வெளியிட்டார் வனிதா. சனம் ஷெட்டியை பாலாஜி எப்படி அப்படி பேசலாம் என்றும், பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் பாலாஜியை
செருப்பால் அடிப்பேன் என்றும், அவருடைய அம்மா தவறு செய்திருப்பார் என்றும் வாய்க்கு வந்தப்படி விளாசினார்.

தகுதியில்லை என்றார்
வனிதாவின் இந்த வீடியோ பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை வனிதாவின் வீடியோ குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சில பேர் பிக்பாஸ் வீட்டிற்கு போகாமல் அதை பற்றி பேசக் கூடாது. அதைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றார்கள்.

தண்ணி அடிக்காம கொடுங்க
தகுதியோடு பேசுகிறோமோ இல்லை தகுதியில்லாமல் பேசுகிறோமோ என்பதெல்லாம் முக்கியமில்லை. தண்ணி அடிக்காம பேசணும், அதுதான் முக்கியம். எதுக்கு ரிவ்யூ கொடுத்தாலும் தண்ணி அடிக்காம கொடுங்க இதுதான் என் கருத்து என்று தனது வீடியோவில் கூறியுள்ளார் ரவீந்தர்.

அப்போதே முட்டிக்கொண்டது
இதனை பார்த்த நெட்டிசன்கள் வனிதா சரக்கடித்துவிட்டு ரிவ்வியூ கொடுக்கிறாரா வனிதா என்று கேட்டு வருகின்றனர். கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போதும் ரவீந்தர் விமர்சனங்களை வெளியிட்டார். அப்போதே வனிதாவுக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











