உடம்பு சரியில்லன்னாதான் டயட் எல்லாம் எட்டிப் பார்க்குது.. புகைப்படம் வெளியிட்ட ரவீந்தர்!
சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி அதிகமான கவனத்தை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் நடந்து முடிந்த இவர்களது திருமணமே இதற்கு காரணம்.
பணத்திற்காகத்தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்ததாக எழுந்த சர்ச்சையை இவர்கள் இருவரும் பொறுமையுடன் கையாண்டனர்.
தற்போது 6 மாத கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்த ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி, தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த ஆண்டில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். மகாலட்சுமிக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் உள்ள நிலையில், பணத்திற்காகத்தான் இந்த திருமணத்திற்கு மகாலட்சுமி சம்மதித்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்கள் அனைத்தையும் இந்த ஜோடி பொறுமையாக கையாண்டது.

ஏராளமான இன்ஸ்டாகிராம் ரசிகர்கள்
அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த ஜோடியை ஏராளமான ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர். இதன்மூலம் ஏராளமான விளம்பரங்களையும் மகாலட்சுமி பெற்றுள்ளார். ஒருபுறம் சீரியல் மற்றொரு புறம் குடும்ப வாழ்க்கை என மகாலட்சுமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விரைவில் சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டு சீரியல் தயாரிப்பில் இவர் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 மாத கால திருமண வாழ்க்கை
இந்த 6 மாத கால திருமண வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் பொழுதையும் மிகச்சிறப்பாக இவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒருபுறம் காதலர் தினம் காதல் வாழ்த்துக்களை பகிரும் இவர்கள், ஆன்மிகத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நல்ல நாட்களில் கோயிலுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

மகாலட்சுமி பிறந்தநாள்
தற்போது தன்னுடைய மனைவியின் பிறந்தநாளையொட்டி சிறப்பான கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார் ரவீந்தர். தன்னுடைய மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், பெரிய கேப்ஷனை வெளியிட்டுள்ளார். ஆமாம் என் மகாலட்சுமிக்கு பிறந்தநாள் என்று கூறியுள்ள அவர், பிரம்மனின் மொத்த கற்பனையாய் தனக்கு விற்பனையானவள் என்றும் மகாலட்சுமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மல்லிகைப்பூ பரிசளித்த ரவீந்தர்
தனக்கு பிடித்த மல்லிகைப்பூவை தனக்கு பிடித்த மகாலட்சுமிக்கு கொடுப்பதை மிகப்பெரிய வரமாக தான் கருதுவதாகவும் ரவீந்தர் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த பெண்ணிற்கும் தான் இதுபோல மல்லிகைப்பூ வாங்கிக் கொடுத்ததில்லை என்றும் மகாலட்சுமிக்கே தான் முதன்முதலில் இந்த விலைமதிப்பில்லாத கிப்டை கொடுப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் ஐ லவ் யூ மகாலட்சுமி என்றும் உருக்கம் தெரிவித்துள்ளார்.

ரவீந்தரின் டயட்
இதனிடையே, தன்னுடைய அடுத்தப்பதிவில் ஏராளமான பழங்களையும் ஜூசையும், பிரெட் ஆம்லெட்டையும் தன்னுடைய டைனிங் டேபிளில் வைத்துள்ள ரவீந்தர், தான் உடல்நலம் பாதிக்கப்படும்போது டயட்டில் இருப்பதாக காமெடி ததும்பும் பதிவையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இதற்கு பெயர் டயட்டா என்று ரசிகர்கள் அதிகமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மகாலட்சுமியும் எனக்கு தெரியும் என்று கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











