Ravindar : என்னது சாப்பாட்டு பக்கியா.. மகாலட்சுமி குறித்து ரவீந்தர் சொன்ன கமெண்ட்டை பாருங்க!
சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் இவர்கள், தங்களது வாழ்க்கையின் அழகான தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர்.
தன்னுடைய சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி, விரைவில் சீரியல் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனைவியுடன் ரவீந்தர் புதிய பதிவு : தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அதுமுதல் மிகவும் பிரபலமான ஜோடியாக இவர்கள் மாறியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு மீடியாக்களும் இவர்களை பேட்டி கண்டு அதை வெளியிட்டனர். இவர்கள் ஜோடி எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினர். காசுக்காகத்தான் மகாலட்சுமி ஃபேட்மேன் என்று சொல்லப்படும் ரவீந்தரை திருமணம் செய்துக் கொண்டாரா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆனால் தாங்கள் மனமொத்த தம்பதிதான் என்று இவர்கள் இருவரும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் தொடர்ந்து பதில் கொடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகின்றனர். தன்னுடைய மனைவி மகாலட்சுமியை கொண்டாடி வருகிறார் ரவீந்தர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து மகாலட்சுமி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த கமிட்மெண்ட்களை முடித்துக் கொண்டு, தொடர்ந்து சீரியல் தயாரிப்பில் அவர் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய கணவர் ரவீந்தரின் தயாரிப்பு நிர்வாகத்திலும் அவர் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தன்னுடைய உடலை குறைக்கும் முயற்சியில் ரவீந்தர் ஈடுபட உள்ளதாக முன்னதாக பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து தன்னுடைய மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இதனிடையே, தன்னுடைய மனைவி மகாலட்சுமியுடன் ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரவீந்தர், Mr and Mrs Sapatu Pakkigal என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய வாழ்க்கையின் சிறப்பே, தன்னுடைய மனைவியின் முகத்தில் காணப்படும் புன்னகையே என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள மகாலட்சுமி, தன்னுடைய புன்னகைக்கு காரணமே ரவீந்தர்தான் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இவர்கள் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகமான லைக்ஸ்களை அளித்து வருகின்றனர். இவர்களை அதிகமான பாலோயர்களும் பாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து இருவரும் அதிகமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மகாலட்சுமியும் அதிகமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











