காதல்.. வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் மூச்சு.. மனைவிக்கு நீண்ட காதலர்தின பதிவை வெளியிட்ட ரவீந்தர்!

சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கு கடந்த ஆண்டில் எளிமையான முறையில் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், இந்தத் திருமணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்த ஜோடி வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் ஒரே நேரத்தில் சந்தித்தது.

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்ற நிலையில் ஆடம்பரமில்லாமல் கோயிலில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

 அதிகமான விமர்சனங்கள்

அதிகமான விமர்சனங்கள்

இந்நிலையில் இவர்களது திருமணம் அதிகமான விமர்சனங்களை சந்தித்தது. பணத்திற்காக மட்டுமே மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்துக் கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களை எல்லாம் பொறுமையாக இந்த ஜோடி எதிர்கொண்டது. இதையடுத்து பல்வேறு பேட்டிகளையும் தொடர்ந்து இவர்கள் கொடுத்தனர்.

உயர்ந்த பாலோயர்கள்

உயர்ந்த பாலோயர்கள்

இதனால் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே இருந்தனர். அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் இருவரும் தனித்தனியாகவும் இணைந்தும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இதனால் இவர்களது பாலோயர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. தொடர்ந்து ரசிகர்களிடம் டச்சிலேயே இவர்கள் இருந்து வருகின்றனர்.

ரவீந்தர் காதலர் தின பதிவு

ரவீந்தர் காதலர் தின பதிவு

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி ரவீந்தர், தன்னுடைய மனைவி மகாலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காதலர் தினத்தையொட்டி நீண்ட பதிவையும் ரவீந்தர் பதிவிட்டுள்ளார். வெற்றி பெற காதல் போட்டியல்ல என்று துவங்கியுள்ளது அவரது பதிவு.

வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் மூச்சு

வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் மூச்சு

காதல் உன் வாழ்நாள் முழுவதும் நீ சுவாசிக்கும் மூச்சு என்றும் எந்த கணத்திலும் காதல் குறையாமல் இருந்தால் அதுதான் உண்மையான காதல் என்றும் அவர் கூறியுள்ளார். என் மகாலட்சுமியின் காதல் உண்மையான காதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தான் காதலித்தபோது இருந்த காதல் உண்மையான காதல் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காதலை வெளிப்படுத்த தெரியவில்லை

காதலை வெளிப்படுத்த தெரியவில்லை

ஆனால் தற்போது மகாலட்சுமி ரவீந்தரை காதலிக்கும்போது அதில் 1 சதவிகிதம் கூட பொய் இல்லை என்றும் ரவீந்தர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் ரெண்டு பேருக்கும் ஒருவர்மீது மற்றொருவருக்கு அன்பும் மரியாதையும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் தன்னுடைய காதலை வெளிப்படுத்த தெரியவில்லை என்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட காதல் பதிவை வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.

தூய்மையான ரவீந்தர் காதல்

தூய்மையான ரவீந்தர் காதல்


இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள மகாலட்சுமி, அழகான வரிகள் என்று பாராட்டியுள்ளார். மேலும் ரவீந்தரின் காதல் எவ்வளவு தூய்மையானது மற்றும் உண்மையானது என்று தனக்கு தெரியும் என்றும் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார். ரவீந்தரை தன்னுடைய வாழ்க்கையில் கொடுத்ததற்கு தொடர்ந்து கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X