Ravindar: Love You All.. ரவீந்தர் போட்ட பதிவு.. மகாலட்சுமி பதில் என்ன தெரியுமா?

சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமணம் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அவற்றை சிறப்பாக எதிர்கொண்டனர். பணத்திற்காக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் பிசியான ஜோடியாக இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் அடுத்தடுத்த பதிவுகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Producer Ravindars Instagram post makes his wife Mahalakshmi to comment

தயாரிப்பாளர் ரவீந்தரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்: தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் கோயிலில் எளிமையாக திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணம் எளிமையாக நடந்து முடிந்தாலும் அடுத்தடுத்த நாட்களிலேயே இவர்கள் மிகவும் பிரபலமான ஜோடியாக மாறினர். பணத்திற்காகத்தான் ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களை பொறுமையாக இருவரும் எதிர்கொண்டனர்.

பணத்திற்காக தன்னை திருமணம் செய்ய வேண்டிய அவசியம் மகாலட்சுமிக்கு இல்லை என்பதை ரவீந்தர் தெளிவுப்படுத்தினார். அவர் கார், வீடு என செட்டிலான லைஃப்பையே மேற்கொண்டு வருவதாகவும் சீரியலில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு தகுந்தாற்போல, திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார் மகாலட்சுமி. ஆனால் இவர் விரைவில் சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகி சீரியல்களை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Producer Ravindars Instagram post makes his wife Mahalakshmi to comment

இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த புகைப்படங்களை இருவரும் இணைந்தபடியும் தனித்தனியாகவும் வெளியிட்டு வருகின்றனர். மகாலட்சுமியும் இணையதளம் மூலம் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை ரவீந்தர் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் அவர் எளிமையான வெள்ளை நிற சட்டையுடன் காணப்படுகிறார். மேலும் நம்மை வெறுப்பவர்கள் நம்மை அதிகமாக சூழ்ந்திருந்தாலும் அன்பு எப்போதுமே இந்த உலகத்தில் நிலைத்திருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம் என்றும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இவரை தொடர்ந்து பாடி ஷேமிங் மூலம் விமர்சித்து வரும் நிலையில், இதுபோன்ற ஒரு பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.

ஆனாலும் அவருக்கு ஆதரவாக பலர் கமெண்ட் செய்துள்ளனர். அவரை தாங்கள் அன்பு செய்வதாகவும் அவர் இந்தப் புகைப்படத்தில் சிறப்பாக காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தை லைக் செய்து கமெண்ட்டும் செய்துள்ளார் அவரது மனைவியும் சின்னத்திரை நடிகையுமான மகாலட்சுமி. தான் தான் படத்தை எடுத்தேன் என்பதை ரவீந்தர் குறிப்பிடாமல் விட்டுவிட்டதாக மகாலட்சமி தன்னுடைய கமெண்ட்டில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X