கர்மா இஸ் பூமராங்.. அநியாயம் பண்ணா அதுக்கான விலையை கொடுத்தே ஆகனும்.. வனிதாவை சீண்டிய தயாரிப்பாளர்!
சென்னை: நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை பிரிந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பாளர், அநியாயம் செய்தால் அதற்கான விலையை கொடுத்துதான் ஆகவேண்டும் என கூறியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயகுமார் விஷ்வல் எடிட்டரான பீட்டர்பாலை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார்.
பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் மனைவி இருந்த போதும் அவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் வனிதா.

ரெண்டு பொண்டாட்டி
தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் திரை பிரபலங்கள் பலரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை ஏற்காத வனிதா, இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண விஷயம், ஒரு பக்கம் எலிசபெத் இருக்கட்டும் மறு பக்கம் நான் இருந்து கொள்கிறேன் என்றார்.

போதை மீது அதிக லவ்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்துவிட்டதாக வனிதா தெரிவித்தார். அவர் மீண்டும் குடிக்கு அடிமை ஆகிவிட்டதாகவும் அவருக்கு தன் மீதுள்ள அன்பை காட்டிலும் போதை பொருட்கள் மீதுதான் அதிக ஆர்வம் உள்ளதாகவும் கூறினார்.

கெஞ்சினேன்..
பீட்டர் பாலை நம்பி ஏமாந்துவிட்டதாகவும் தோற்று போய்விட்டதாகவும் கூறினார் வனிதா. தனக்கும் திருமண பந்தத்துக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்று கூறியும் புலம்பினார். நான் காலில் விழுந்து கெஞ்சியும் கூட அவர் ஸ்மோக்கிங் மற்றும் குடியை விடவில்லை என்றும் கூறினார்.

தயாரிப்பாளர் ரவீந்தர்
பீட்டர் பாலை அவரது முதல் மனைவியே வைத்துக் கொள்ளட்டும் என்றும் நடுவில் வந்த நான் நடுவிலேயே போகிறேன் என்றும் கூறினார் வனிதா. இந்நிலையில் வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு விரட்டியதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முதல் ஆளாய் போட்ட தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் வனிதா குறித்து பேசியுள்ளார்.

விலை கொடுத்தே ஆகவேண்டும்
அதில் இது எல்லோருக்கும் ஒரு பாடம். யாராக இருந்தாலும் செய்த அநியாயத்துக்கு விலை கொடுத்தே ஆகவேண்டும். நான் பீட்டர் பால் ஒரு ஃபிராடு என்று சொன்ன போது அவருக்கு மெடல் அள்ளிக் கொடுத்தார் வனிதா. எலிசபெத்துக்கு நடப்பது அநியாயம். இப்படி நடக்கக்கூடாது.

கண்ணீருக்கு பதில் சொல்லணும்
வனிதாவின் இந்த வீடியோவை பார்த்து எனக்கு பரிதாபமாக உள்ளது. ஆனால் சில பேருடைய கண்ணீருக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். சில பேரை கண்ணீர் விட வைத்தால் அதற்கு நாம் விலை சொல்லியாக ஆக வேண்டும். வனிதா பர்சனலை பற்றி பேச எனக்கு உரிமையில்லை.

கர்ம பலன்
ஒரு பொம்பளையா நீங்கள் என்ன மாதிரியான வலியை அனுப்பவிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். பீட்டர் பால் வீட்டிலிருந்து விரட்டப்பட்டதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு காரணம், உலகமே எதிர்க்க ஒரு அநியாயத்தை செய்யும் போது அதற்கான கர்ம பலனை நாம் அனுபவிப்போம் என்பதை தெரியப்படுத்தான், வேறு ஒன்னும் இல்லை.

கர்மா இஸ் பூமராங்
என்ன நடந்தது? பீட்டர் பால் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார் என எல்லாம் எனக்கு தெரியும். கர்மா இஸ் பூமராங் என்பதை தாண்டி, வனிதா மட்டும் இல்லை பீட்டர் பாலும் துரோகம் செய்தால் அதற்கான கர்ம பலனை அவர் அனுபவிப்பார் என்பதுதான்.. இவ்வாறு ரவீந்தர் சந்திரசேகர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











