மகாலட்சுமி கிட்ட ஏற்கனவே ஆடி கார் இருக்கு..திருமணம் பற்றி ரவீந்தர் பேச்சு!
சென்னை : பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
இவர்களின் திருமணம் நடந்தது முதல் இருவரும் தொடர்ந்து ட்ரெண்டாகி விட்டனர். அடுத்தடுத்த பேட்டிகளின்மூலம் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இவர்கள் எதை சொன்னாலும் எதை செய்தாலும் ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இந்தத் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் எளிமையாக நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்களை வெளியிட்டு தங்களது திருமணத்தை அறிவித்தார் ரவீந்தர்.

ட்ரெண்டிங்கில் ரவீந்தர் -மகாலட்சுமி
இதையடுத்து இவர்கள் இருவரும் தொடர்ந்து ட்ரெண்டாகினர். தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே உள்ளனர். யூடியூப், டிவி சேனல்கள் என தொடர்ந்து பேட்டியளித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எதை செய்தாலும் எதை சொன்னாலும் அது விவாதத்திற்குரியதாக மாறிவிடுகிறது.

அதிகரித்த பாலோயர்கள் எண்ணிக்கை
தொடர்ந்து மீடியாக்களும் இவர்களை பேட்டி கண்டுக் கொண்டு இருக்கிறது. இவர்களும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் தொடர் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரையும் பாலோ செய்யும் பாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

2வது திருமணம் குறித்து மகாலட்சுமி
மகாலட்சுமிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதனிடையே தன்னுடைய முதல் திருமணம் குறித்து பேசிய அவர், தன்னுடைய முதல் கணவர், ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே திருமணம் செய்துக் கொண்டதாகவும் தான் தன்னுடைய குழந்தையின் எதிர்காலத்தை கருதி 2வது திருமணம் குறித்து யோசிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மகாலட்சுமியிடம் ஆடி கார் உள்ளது
இதனிடையே, திருமணத்திற்கு பிறகு ரவீந்தர், மகாலட்சுமிக்கு பெரிய பங்களா, ஆடி கார் மற்றும் ஏராளமான நகைகளை பரிசளித்ததாக தகவல்கள் வெளியானது குறித்தும் இருவரும் மனம் திறந்துள்ளனர். மகாலட்சுமியிடம் ஏற்கனவே ஆடி கார் உள்ளதாக ரவீந்தர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மகாலட்சுமியை கலாய்த்த ரவீந்தர்
விஜேவாக இருந்த மகாலட்சுமி, சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே அவருக்கு அவருடைய வீட்டில் ஏராளமாக சேர்த்து வைத்துள்ளதாகவும் ஆனால் தனக்கு திருமணத்தின்போது இரண்டு மோதிரங்கள் மட்டுமே போட்டதாகவும் மகாலட்சுமியை வம்பிழுத்தார் ரவீந்தர்.


Click it and Unblock the Notifications











