அதுதான் கேவலம்.. லைவில் கிஸ் கொடுக்க மட்டும்தான் பீட்டர் பால் வருவாரா.. செம ரைடுவிட்ட தயாரிப்பாளர்!

சென்னை: வனிதாவையும் பீட்டர் பாலையும் செம ரைடு விட்டுள்ளார் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர்.

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை.

அவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்தது பெரும் சர்ச்சையானது. வனிதாவின் திருமணம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

தயாரிப்பாளர் ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர்

பிரபலங்கள் உட்பட பலரும் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் கவினின் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தை தயாரித்த ரவீந்தரும் வனிதாவின் திருமணம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கருத்து கூறினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

இதனால் கடுப்பான வனிதா என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச நீங்கள் யார் என கேட்டு ரவீந்தரை விளாசினார். மேலும் இதுகுறித்து அவருக்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பிய வனிதா, தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

மிரட்டிய வனிதா

மிரட்டிய வனிதா

மேலும் இப்படி அடுத்தவர் வாழ்க்கை குறித்து பேசுவதற்கு சாப்பிடாமல் இருக்கலாம் என்றும் வெட்கம் கெட்டவன் என்றும் அவரை விளாசினார். மேலும் தன்னை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மிரட்டினார் வனிதா.

Recommended Video

இது என்னோட வாழ்க்கை Vanitha producer Ravinder க்கு பதிலடி
அவர்தான் கேட்கனும்

அவர்தான் கேட்கனும்

இதற்கு பதில் அளித்த ரவீந்தர், தன்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும் தனது உடலமைப்பு குறித்து பேசிய வனிதாதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ரவீந்தர், பீட்டர் பாலின் முதல் மனைவி ஏன் 4 ஆண்டுகளாக எதுவும் பேசவில்லை, முடிவெடுக்கவில்லை என்பதெல்லாம் கேனத்தனமானது.

தரம் கெட்டு..

தரம் கெட்டு..

அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நல்ல குடும்பத்து பெண்கள் அப்படிதான் இருப்பார்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். ஒரு குடும்பத்தை கெடுத்ததால்தான் அதைப்பற்றி பேசுகிறோம். வனிதா அக்கா அளவுக்கு நான் தரம் கெட்டு பேச விரும்பவில்லை.

கிஸ் மட்டும் தானா?

கிஸ் மட்டும் தானா?

16 வயது மகளிடம் போய் நான் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவா என கேட்பதுதான் கேவலம். லைவில் வனிதாவுக்கு கிஸ் கொடுக்க மட்டும்தான் பீட்டர் பார்ல் வருவாரா? விளக்கம் கொடுக்க வர மாட்டாரா என்றும் விளாசி விட்டிருக்கிறார்.

லிப் டூ லிப்

லிப் டூ லிப்

வனிதா சமையல் நிகழ்ச்சிக்காக யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் லைவில் பேசும் போதெல்லாம் ஃபைனல் டச்சாக லிப் டூ லிப் முத்தம் கொடுத்து வருகிறார் அவரது மூன்றாவது கணவரான பீட்டர் பால். முதல் மனைவி குற்றம்சாட்டிய போதும் அவர் விளக்கம் கொடுக்க வரவில்லை.

லைவில் லிப்லாக்

லைவில் லிப்லாக்

வனிதா அவருக்காக சமூக வலைதளங்களில் மற்றவர்களுடன் மல்லுக்கட்டும் போதும் பீட்டர் பால் எதுவும் பேசவில்லை. வனிதாவின் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பீட்டர் பால் லிப்லாக் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: vanitha வனிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X