பீட்டர் பால் மூஞ்ச உடைப்பேன்னு கேட்பேன்.. வீடியோ வெளியிட்டு வனிதாவை வெளுத்து வாங்கிய ரவீந்தர்!

சென்னை: தன்னை ஆம்பளையா என்று கேட்ட வனிதா விஜயக்குமாரை வீடியோ வெளியிட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர்.

Recommended Video

Vanitha Vijaykumar Lawyer Press Meet

நடிகை வனிதா நேற்று போரூர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் யூட்யூப் பிரபலம் சூரியா தேவி மீது புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வனிதா, சூர்யா தேவி கஞ்சா விற்பதோடு மட்டுமின்றி சொல்ல முடியாத பல தொழில்களையும் செய்து வருவதாக சாடினார்.

ரவீந்தர் பதில்

ரவீந்தர் பதில்

அதோடு தயாரிப்பாளர் ரவீந்தரையும் கடும் சொற்களால் சாடினார். ரவீந்தரை அவன் இவன் என்று பேசிய வனிதா, அவனெல்லாம் ஆம்பளையா என்றும் மனுஷனா என்றும் விளாசி தள்ளினார். இந்நிலையில் நடிகை வனிதாவுக்கு வீடியோ வெளியிட்டு பதில் தெரிவித்துள்ளார் ரவீந்தர்.

வாய்ஸ் மெஸேஜ்

வாய்ஸ் மெஸேஜ்

அதில், சைஸ், ஹைட், வெயிட் என எல்லாத்துலேயேயும் வனிதாவை விட நான் பெருசு தான். அவங்கள தொட்டுதான் பிரபலமாகனும்ங்ற அவசியம் இல்ல. எனக்கு
10 முறை கால் பண்ணாங்க எடுக்கலன்னதும் வாட்ஸ்அப்ல வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினாங்க.

கம்முன்னு இருக்கனுமா?

கம்முன்னு இருக்கனுமா?

நான் என்ன அவங்க வீட்டு வேலைக்காரனா அவங்க கால் பண்ணா நான் எடுக்கனுமா? எடுக்கல என்பதற்காக என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? நீங்க என்ன வேணாலும் பேசுவீங்க நான் கம்முன்னு இருக்கனுமா. நீங்க கண்டுக்காமா போக வேண்டியதுதானே.

குடும்பம் இருக்கு

குடும்பம் இருக்கு

என்னை ஆம்பளையான்னு கேட்டீங்க என் உடம்ப பார்த்து பாடி ஷேமிங் பண்ணீங்க.. என்ன சாப்பிடறன்னு கேட்டீங்க. ஆனா நான் ரொம்ப கண்ணியம்மா உங்கக்கிட்ட பேசினனேன். லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி அம்மால்லாம் மன்னிப்பு கேட்டாங்கன்னா, அவங்களுக்கு குடும்பம் இருக்கு.

ஆம்பளையான்னு கேட்குற?

ஆம்பளையான்னு கேட்குற?

நீ கேவலமா பேசுவன்னு அவங்க மன்னிப்பு கேட்டாங்க. அதுக்காக நான் கேட்கனும்னு அவசியம் இல்ல. இன்டர்வியூல கேட்டதுக்கு கருத்து சொன்னேன் கேள்வி கேட்கல. நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்? என் வீட்டு பொம்பளைங்கள பத்தி பேசுற, நான் சும்மா இருக்கனுமா? ஆம்பளையான்னு கேட்குற?

மூஞ்ச உடைப்பேன்

மூஞ்ச உடைப்பேன்

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஆம்பளைன்னா வீட்டு பொம்பளைங்க மானத்த காப்பாத்துறதுதான். அதன் நான் சரியா பண்ணிக்கிட்டு இருக்கேன். நீ என் வீட்டு பொம்பளைங்கள பத்தி பேசினா நான் உன் வீட்டு ஆம்பளையா பொம்பளையான்னு பார்க்க மாட்டேன்.
பீட்டர் பால் மூஞ்ச உடைப்பேன்னு கேட்பேன்.

பெரிய ஆளாக்கிவிட்டது நீ

பெரிய ஆளாக்கிவிட்டது நீ

விஜய் டிவி என்னாலதான் நடக்குது பிக்பாஸ் ஹிட்டானதுக்கு நான்தான் காரணம், குக்வித் கோமாளி ஹிட்டாக நான்தான் காரணம்னுங்கற நீ சொல்றதுக்கு விஜய் டிவி வேணும்னா கம்முனு இருக்கலாம். நீ என்ன கருமத்த வேணா பண்ணு என்னை பெரிய ஆளாக்கிவிட்டது நீ.

தற்கொலை செய்யவா?

தற்கொலை செய்யவா?

சினிமாக்காறங்கள எதிர்க்க பயமா இருக்குன்னு பீட்டர் பால் மனைவி சொன்னதால நான் அவங்களுக்கு உதவி செய்தேன். அப்போவும் உன்ன டேமெஜ் பண்ணல. பீட்டர் பாலின் மகன் கேட்கிறான், உங்க அப்பா கிஸ் அடிக்கிற வீடியோ அனுப்புவாரா என்று மற்றவர்கள் கேட்கிறார்கள் தற்கொலை செய்து கொள்ளவா அண்ணா என கேட்கிறான்.

பேச மாட்டேன்..

பேச மாட்டேன்..

எனக்கு பப்ளிசிட்டி தேவையில்ல. உன்ன மாதிரி புழுத்தி நான் இல்ல யார் குடியும் நான் கெடுத்ததில்ல, யாருக்கும் துரோகம் பண்ணல. இனிமே நான் உன்னப்பத்தி பேச மாட்டேன். நீ எப்படி தரங்கெட்டு போகனுமோ போ.. பேசு, ஒரு குடும்பத்த கெடுத்த.. பீட்டர் பால் மனைவிக்கு எப்படி உதவனுமோ நான் பார்த்துக் கொள்கிறேன்.

அப்புறம் தெரியும்

அப்புறம் தெரியும்

நீ என்னை முறைச்சபோ நானும் முறைச்சேன்.. இப்போ நீ அழற.. ஒரு பொண்ணோட கண்ணீருக்கு நான் காரணமா இல்ல. இதுக்கு மேல என்ன பத்தி பேசினா.. பேசு அதுக்கு அப்புறம் தெரியும்.. என தெரிவித்துள்ளார் ரவீந்தர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X