“எங்கள் திருமணத்தை வைத்து இப்படி செய்யலாமா?”: புதுமாப்பிள்ளை லிப்ரா ரவி ஆதங்கத்துடன் கேள்வி

சென்னை: தமிழில் சுட்ட கதை, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்தவர் லிப்ரா ரவி எனப்படும் ரவிந்திரன் சந்திரசேகரன்.

இவர் கடந்த வாரம் சின்னத்திரை நடிகை மகாலாட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்த காதல் ஜோடி குறித்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் செய்திகளும் வதந்திகளும் ஒருசேர வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட லிப்ரா ரவி

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட லிப்ரா ரவி

தமிழித் திரையுலகின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் லிப்ரா ரவி எனப்படும் ரவிந்திரன் சந்திரசேகரன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், முதல் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ரவி - மகா ஜோடி

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ரவி - மகா ஜோடி

முன்னணி சீரியல் நடிகையாக வலம்வரும் மஹாலட்சுமி, தேவதையைக் கண்டேன், செல்லமே, அரசி, கேளடி கண்மணி வாணி ராணி, பொண்ணுக்கு தங்க மனசு என ஏராளமான நாடகங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், திருமணத்திற்குப் பின்னர் ரவீந்திரன் - மகாலட்சுமி தம்பதியினர் ரொமன்ஸ் செய்யும் போட்டோக்களும், அவர்கள் டூர் சென்ற வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன.

தனித் தீவுக்கு ஹனிமூன் போறதெல்லாம் வதந்தி

தனித் தீவுக்கு ஹனிமூன் போறதெல்லாம் வதந்தி

லிப்ரா ரவி, மகாலட்சுமி ஜோடியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வரும் நெட்டிசன்களுக்கு, அவர்களாகவே அவ்வப்போது கண்டெண்ட் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் விரைவில் ரவீந்தரும் மகாலட்சுமியும் தனித் தீவுக்கு ஹனிமூன் செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள ரவீந்தர், நாங்கள் தனித் தீவுக்கெல்லாம் ஹனிமூன் போக ப்ளான் பண்ணல என விளக்கம் அளித்துள்ளார்.

வருமானத்துக்காக இப்படி செய்யலாமா?

வருமானத்துக்காக இப்படி செய்யலாமா?

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், அவரது மனைவி மகாலட்சுமி இருவரும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லிப்ரா ரவி, "ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது. எங்கள் திருமணம் இவ்வளவு பிரபலம் ஆக வேண்டிய அவசியமில்லை. தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய ஒரு நிறுவனம், அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமண வீடியோவை வெளியிட்டு சம்பாதித்துள்ளது வித்தியாசமான ஒன்று. போற இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது" எனக் கூறியுள்ளார். ஆனாலும், அந்த நிறுவனம் எதுவென்று எதையும் அவர் குறிப்பிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X