இதை செய்யாவிட்டால் மாமியார் கொடுமைதான்.. என்ன இப்படி சொல்லியிருக்காரு ரவீந்தர்!

சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் -மகாலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த ஜோடி பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு அதை சிறப்பாக சமாளித்தது.

தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே இவர்கள் இருந்தனர். தொலைகாட்சிகள், யூடியூப் சேனல்களுக்கு இவர்கள் தொடர்ந்து பேட்டியளித்து வந்தனர்.

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் கோயிலில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டனர். இந்த திருமணத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார் ரவீந்தர்.

அடுத்தடுத்த விமர்சனங்கள்

அடுத்தடுத்த விமர்சனங்கள்

இதையடுத்து இவர்களுக்கு நடந்ததெல்லாம் ஊரறிந்த ரகசியம். பணத்திற்கு ஆசைப்பட்டே மகாலட்சுமி, ரவீந்தரை திருமணம் செய்துக் கொண்டார். ரவீந்தர் மகாலட்சுமிக்கு பங்களா, ஆடி கார், நகைகளை பரிசளித்துள்ளார் என்பது போன்ற கமெண்ட்டுகள் இவர்களை சுற்றி வலம் வந்தன.

தொடர் ட்ரெண்டிங்

தொடர் ட்ரெண்டிங்

இவை அனைத்திற்கும் சளைக்காமல் பதிலளித்தது இந்த ஜோடி.இடையில் வனிதா விஜயகுமார் போன்றவர்களின் சாபத்தையும் சமாளித்தது. தொடர்ந்து யூடியூப், தொலைக்காட்சி சானல்களுக்கு பேட்டியளித்தது. இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுக்கு பதிலளித்தது. இப்படி தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே இருந்தது.

மோசமான ஞாயிறு

மோசமான ஞாயிறு

இதனிடையே மகாலட்சுமியிடம் ஏற்கனவே ஆடி கார் உள்ளதாகவும் அதனால் தான் அவருக்கு ஆடி காரை வழங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் ரவீந்தர் விளக்கம் அளித்தார். மேலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எப்படி கழிந்தது என்பதையும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

டெலிவரி பாயாக மாறிய ரவீந்தர்

டெலிவரி பாயாக மாறிய ரவீந்தர்

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும் தனக்கு சூட்டிங் இருப்பதாக கூறி மகாலட்சுமி சென்று விட்டதாகவும், இதையடுத்து புரட்டாசி துவக்க நாளான இன்று, தன்னுடைய அம்மா சிறப்பான சமையலை செய்துக் கொடுக்க அதை, மகாலட்சுமிக்கு தான் டன்சோ டெலிவரி பாயாக மாறி எடுத்து சென்று கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மாமியார் கொடுமை குறித்து ரவீந்தர்

மாமியார் கொடுமை குறித்து ரவீந்தர்

இதையடுத்து மகாலட்சுமியிடம் அந்த பாத்திரங்களை எல்லாம் திரும்ப மறக்காமல் கொண்டு வரும்படி ரவீந்தர் மகாலட்சுமியிடம் தெரிவித்திருக்கிறார். இல்லையென்றால் மாமியார் கொடுமை துவங்கிவிடும் என்றும் தன்னையும் தன்னுடைய அம்மா தொடர்ந்து டன்சோ டெலிவரி பாயாகவே மாற்றிவிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

உருப்படியான விஷயம்

உருப்படியான விஷயம்

மேலும் நீண்ட காலங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமையில் உருப்படியான ஒரு விஷயத்தை செய்துள்ளதாகவும் ரவீந்தர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. அவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X