பிரச்சனை வருமோ என விஷால் பயப்படுகிறார்.. புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி விளக்கம்!
சென்னை: விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் நடிகர் விஷால். விஷால் பிலிம் பேக்டரி மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சவுத்ரி மீது சென்னை காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.

வீட்டுப் பத்திரம்
அதாவது படத் தயாரிப்புக்காக நடிகர் விஷால் ஆர்பி சவுத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக தன் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில பத்திரங்களை ஆவணங்களாக கொடுத்ததாக தெரிகிறது.

விஷால் போலீஸில் புகார்
இந்நிலையில் கடன் தொகையை செலுத்திய பிறகும் உறுதி மொழி பத்திரங்களை திருப்பித் தராததால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஷால் கடன் வாங்கினார்
இந்நிலையில் விஷாலின் புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். அதில், இரும்புத்திரை படத்துக்காக விஷால் என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் கடன் வாங்கினார். அது தொடர்பான ஆவணங்களை ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமார் கவனித்து வந்தார்.

எழுதி கொடுத்துவிட்டோம்
துரதிர்ஷ்டவசமாக அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் பொறுப்பில் இருந்த ஆவணங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பி தந்த போது, அதனை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையொப்பமிட்டு கொடுத்துள்ளோம்.

விஷால் பயப்படுகிறார்
ஆனால் தொலைந்து போன ஆவணங்கள் கிடைத்துவிட்டால், அதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வருமோ என விஷால் பயப்படுகிறார் என்றும் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

விரைவில் தீர்க்கிறேன்
மேலும் தற்போது கொடைக்கானலில் உள்ள தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, ஓரிரு நாட்களில் சென்னை திரும்பி இந்த பிரச்சினையில் சரியான விளக்கம் தருவதாகவும், விரைவில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications