Chiyaan 62 movie: சியானுக்கு துஷாரா விஜயனை ஜோடியாக்க காரணம்.. சியான் 62 பட தயாரிப்பாளர் ஓபன்!

சென்னை: நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆண்டில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியானது பொன்னியின் செல்வன் 2 படம். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் சியானின் கேரக்டர் மற்றும் நந்தினியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராயுடனான அவரது காதல் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ள சூழலில் படத்தில் முதியவர் மற்றும் இளைஞர் என இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் முன்னதாக ஜனவரியிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட சூழலில், படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று முன்னதாக படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் பேட்டியொன்றில் கூறியுள்ளார். இதனிடையே அடுத்ததாக சியான் 62 படத்தில் அருண்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Producer Riya shibu opens up about the Heroine of Vikram s Chiyaan 62 movie

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் சாக்லேட் பாயாக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கினார். அவரது துவக்க காலம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. படங்களில் சான்ஸ் கிடைப்பது அவருக்கு குதிரைக்கொம்பாக காணப்பட்டது. ஆயினும் சினிமாவை விட்டு விலகாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வந்த விக்ரம், ஒரு கட்டத்தில் பாலா இயக்கத்தில் சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார், இந்த படத்திற்காக அவர் மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டார். படத்தில் அவர் ஏற்று நடித்த சியான் கேரக்டர் பெயராலேயே தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் விக்ரம்.

பொன்னியின் செல்வன் 2 படம்: தொடர்ந்து கமர்சியல் படங்களில் மட்டுமில்லாமல் தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் வகையிலும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விக்ரம். அந்த வகையில் கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட மல்ட்டி ஸ்டார்கள் இந்த படத்தில் இணைந்திருந்த சூழலில் விக்ரமின் கேரக்டர் தனியாக தெரிந்தது. இதில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய் உடனான கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. இவர்களின் இந்த காதல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தங்கலான் படத்தில் மிரட்டல்: கைகூடும் காதலை காட்டிலும் காதல் கைகூடாமல் இருப்பது வலி நிறைந்ததாக இருந்த போதிலும் அதில் இருக்கும் சுகம் இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிப்பட்டது. இந்நிலையில் இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை அதன் வலியை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் முதியவர் மற்றும் இளைஞன் என இருவேறு கெட்டப்களில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விக்ரமிற்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்: இந்தப் படத்தை தொடர்ந்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தன்னுடைய சியான் 62 படத்தில் கமிட் ஆகியுள்ளார் விக்ரம். இந்த படத்தின் அறிவிப்பு டீசர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. கிராமத்து கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக உள்ளதாகவும் படத்தின் கதை கமர்சியலாக அமையும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு துஷாராவை இயக்குநர் தேர்வு செய்ததற்கு காரணத்தை படத்தின் தயாரிப்பாளர் தற்போது தெரிவித்துள்ளார்.

துஷாராவை தேர்ந்தெடுக்க காரணம்: படத்தில் விக்ரமிற்கு புதிதான ஒரு ஜோடியை சேர்க்க இயக்குநர் விரும்பியதாக படத்தின் தயாரிப்பாளர் ரியா சிபு தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் நடிகர் எஸ்ஜே சூர்யா உடனடியாக ஓகே சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் கமர்ஷியலாக மிகப்பெரிய அளவில் உருவாகவுள்ளதாகவும் இந்த மாதத்திலேயே படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X