twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கோட்டை முனி படம்... பர்ஸ்ட் லுக் வெளியீடு

    |

    சென்னை : நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கோட்டை முனி.

    அறிமுக இயக்குநர் இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்கவுள்ளார்.

    சிம்புவின் மாநாடு...யு/ஏ சான்று வழங்கிய சென்சார்...படம் எவ்வளவு நேரம் தெரியுமா ? சிம்புவின் மாநாடு...யு/ஏ சான்று வழங்கிய சென்சார்...படம் எவ்வளவு நேரம் தெரியுமா ?

    இந்நிலையில் இந்தப் படத்தின் மிரட்டலான முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

    கோட்டை முனி படம்

    கோட்டை முனி படம்

    1980களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் அரசனாக நிஜத்தில் வாழ்ந்த கோட்டை முனி என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ள படம் கோட்டை முனி. இலங்கை, தனுஷ்கோடி இடையில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளது.

    அறிமுக இயக்குநர் இளைய பிரபாகரன்

    அறிமுக இயக்குநர் இளைய பிரபாகரன்

    அறிமுக இயக்குநர் இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை வசம் எழுதி படத்தை இயக்கவுள்ளார். ட்ரீம் லைட் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது ட்ரீம் லைட் பிக்சர்ஸ்.

    ஆர்கே சுரேஷ் நாயகன்

    ஆர்கே சுரேஷ் நாயகன்

    கேங்ஸ்டர் படமாக எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தில் கோட்டை முனியாக நடிக்கவுள்ளார் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ். இவரது கேரக்டர் மிகவும் வித்தியாசமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல காலா படம் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்ற திலீபனும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

    கடலை ஒட்டி படப்பிடிப்பு

    கடலை ஒட்டி படப்பிடிப்பு

    மேலும் சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர், ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன் உள்ளிட்ட பலரும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடலை ஒட்டி நடைபெறவுள்ளது.

    ஆழ்கடல் சண்டை காட்சிகள்

    ஆழ்கடல் சண்டை காட்சிகள்

    ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் ஆழ்கடல் சண்டைக் காட்சிகளை எடுக்கவும் இயக்குநர் திட்டமிட்டுள்ளார். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக டைகர் ஜான்மார்க் இணைந்துள்ளார்.

    Recommended Video

    Blue sattai Maran Funny speech in Anti Indian Movie Trailer Lauch Event | Tamil Talkies
    கோடை கொண்டாட்டமாக ரிலீஸ்

    கோடை கொண்டாட்டமாக ரிலீஸ்

    படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக படம் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் இசையமைப்பாளராக எம்எஸ் பாண்டியன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    English summary
    RK Suresh joined as lead in Kottai Muni movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X