முத்த சர்ச்சையில் சிக்கிய காமசூத்ரா 3டி பட இயக்குனர் ருபேஷ் பால்
பாரிஸ்: மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி வேனிஷிங் ஆக்ட் படத்தில் வரும் முத்தக் காட்சிக்காக இயக்குனர் ருபேஷ் பால் கேன்ஸ் திரைப்பட விழாவில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
மாயமான மலேசிய விமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து ருபேஷ் பால் தி வேனிஷிங் ஆக்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீஸர் யூடியூபில் வெளியானது. அதை 3 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ருபேஷ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முத்தம்
தி வேனிஷிங் ஆக்ட் டீசரில் விமானத்தின் சிப்பந்தி ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க அதை மற்றொரு சிப்பந்தி கோபத்துடன் பார்ப்பது போல் காட்சி உள்ளது. இந்த முக்கோண காதல் கதையால் தான் ருபேஷ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கேன்ஸ்
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற ருபேஷ் சிவப்பு கம்பளத்தில் நடக்கையில் பத்திரிக்கையாளர்கள் அவரிடம் முத்த சர்ச்சை பற்றி கேள்வி கேட்டனர்.

மன்னிப்பு
தி வேனிஷிங் ஆக்ட் படம் முக்கோண காதல் கதை அல்ல. மேலும் இந்த படத்தின் மூலம் யார் மனதையும் புண்புடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ருபேஷ் தெரிவித்துள்ளார்.

காமசூத்ரா 3டி
ஷெர்லின் சோப்ராவை வைத்து காமசூத்ரா படத்தை 3டியில் எடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவர் தான் இந்த ருபேஷ் பால் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











