செல்ஃபி படத்தோட அடுத்த அறிவிப்பு… இன்று வெளியாகிறது
சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் கவுதம் மேனனுடன் இணைந்து நடித்துள்ள படம் செல்ஃபி.
கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் அடுத்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக தாணு தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ்
நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் பேச்சுலர், ஜெயில் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 5 நாட்கள் இடைவெளியில் இந்தப் படங்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளன. இதையடுத்து ஜிவியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பு
இந்நிலையில் அவரது அடுத்த படம் செல்ஃபி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அசுரன், கர்ணன் படங்களை தொடர்ந்து இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். படத்தில் ஜிவி பிரகாஷுக்கு வர்ஷா பொல்லம்மா நாயகியாகியுள்ளார். மேலும் படத்தில் கௌதம் மேனனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மதிமாறன் இயக்கம்
வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மிரட்டலான பர்ஸ்ட் லுக்
முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே சிறப்பான வகையில் ரீச் ஆகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் படத்தில் ஜிவி மற்றும் கௌதம் மேனன் இருவரும் சிறப்பான வகையில் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

செல்ஃபி படத்தின் ரிலீஸ்
இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் ரிலீசாகும் என்று முன்னதாக கூறப்பட்டது. இந்நிலையில் இம்மாதத்தில் ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளதால், செல்ஃபி படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று புதிய அறிவிப்பு
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதில் பர்ஸ்ட் லுக் முலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செல்ஃபி படத்தின் அடுத்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











