தொடரும் சோகம்.. கஜினி பட தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி.. திரைத்துறை அதிர்ச்சி!
சென்னை: கஜினி உட்பட பல வெற்றிப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சேலம் அழகாபுரம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன்.
59 வயதான இவருக்கு கடந்த திங்கள் கிழமையன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சை பலனின்றி பலி
இதனை தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சேலம் சந்திரசேகர் உயிரிழந்தார்.

மின்மயானத்தில் தகனம்
இவரது உடல் சீலநாயக்கன்பட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சேலம் சந்திரசேகர் சுள்ளான், பிப்ரவரி 14, கஜினி, சபரி, கில்லாடி உள்ளிட்ட படங்களை சரவணா கிரியேஷன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

பெரும் சோகம்
கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பு பணியில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கொரோனாவுக்கு சேலம் சந்திரசேகர் மரணமடைந்திருப்பது திரைப்பட துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் துக்கம்
தமிழ் சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், தயாரிப்பாளர் பாபு ராஜா, நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி உள்ளிட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











