இலக்கை அடைவது வெற்றியல்ல… தோற்பது தோல்வியுமல்ல… ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் ட்வீட்!
சென்னை : நெட் பிளிக்ஸில் கடந்த 18ந் தேதி வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Recommended Video
ஜஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி,ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகி இருந்தது

ஹிட் மூவி
அசுரன், கர்ணன் என மிரட்டலான வெற்றிப்படங்களை கொடுத்து இருந்தார் தனுஷ். மாபெரும் வெற்றிப்படத்தை அடுத்து ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஆனால், இந்த திரைப்படம் தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் தனுஷ் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்

நெகட்டிவ் கமெண்ட்
சமூகவலைத்தளங்களிலும் இந்த திரைப்படம் குறித்து நெகடிவ் கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக தனுஷ் அறிமுகமாகும் முதல் காட்சியில் அதாவது ரயில்வே ட்ராக்கில் காருடன் நிற்கும் காட்சி லாஜிக்கே இல்லாமல் இருந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அழகான காட்சி
மேலும், இந்த திரைப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் அது சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவும்தான். படத்தில் வந்த இரண்டு பாடல்களும் ரசித்து கேட்கும் படி இருந்தன. இதேபோல, ஒரே கோணத்தில் பல முறை ட்ராவலாகும் ஷாட்கள் என அனைத்தும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் என மாறி மாறி கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

தோற்பது தோல்வியுமல்ல
இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இலக்கை அடைதல் என்பது வெற்றியல்ல.. அதில் தோற்பதும் தோல்வியுமல்ல... தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும் என விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











