twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டை எழுதி கொடுத்தேன்.. கதையில தலையிட்டதால படம் பிளாப்.. பிரபல ஹீரோ மீது தயாரிப்பாளர் பகீர் புகார்

    By
    |

    சென்னை: படத்தின் தோல்விக்கு ஹீரோவின் தலையீடுதான் காரணம் என்பதால் எழுது கொடுத்த வீட்டை அவர் திருப்பித் தரவேண்டும் என்று தயாரிப்பாளர் புகார் கூறியுள்ளார்.

    'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த படம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்.
    தெலுங்கு, தமிழில் வெளியான இந்தப் படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்

    அவர், ஜோடியாக ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

    அர்ஜூன் ரெட்டி போலவே

    அர்ஜூன் ரெட்டி போலவே

    கிராந்தி மாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆனது. கே.எஸ்.ராமாராவ் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.
    படத்தின் டீசர் வெளியானதுமே, இது அர்ஜூன் ரெட்டி படத்தை போலவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

    எதிர்பார்த்த வெற்றி

    எதிர்பார்த்த வெற்றி

    தெலுங்கு டீசர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. அதில், சில வெறுக்கத்தக்க வசனங்கள் இடம்பெற்றிருந்ததாம். தமிழ் ரசிகர்கள் அதை ஏற்றக மாட்டார்கள் என்று தமிழ் டீசரில் அதை மாற்றி வெளியிட்டனர். இந்நிலையில் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் நாள் இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிங் இருந்தது.

    ரூ.30 கோடிக்கு விற்பனை

    ரூ.30 கோடிக்கு விற்பனை

    ஆனால், அடுத்த நாள் பாதியாக சரிந்த வசூல், பிறகு மொத்தமாக விழுந்தது. எதிர்பார்ப்புள்ள ஹீரோ, விஜய் தேவரகொண்டா இதுபோன்ற கதைகளில் நடிக்கக் கூடாது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதி வந்தனர். இது தவறான சாய்ஸ் என்றும் கூறினர்.
    இந்தப் படம் ரூ.30 கோடிக்கு விற்கப்பட்டதாம். ஆனால், மொத்தமாக ரூ.10 கோடி மட்டும்தான் வசூலித்ததாகக் கூறப்பட்டது.

    கதையை மாற்றினார்

    கதையை மாற்றினார்

    இதனால் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தயாரிப்பாளரிடம் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் கதையில் ஹீரோ விஜய் தேவரகொண்டா தலையிட்டு மாற்றினார் என்றும் சில காட்சிகளை அவரே இயக்கினார் என்று தகவல்கள் வெளியாயின.
    இதை அந்த படத்தின் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    வீட்டை கொடுத்தேன்

    வீட்டை கொடுத்தேன்

    'அவர் கதையில் தலையிட்டதால்தான் படம் தோல்வி அடைந்தது. விஜய் தேவரகொண்டா வுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி, முதலில் ரூ.8 கோடி கொடுத்தேன். ரிலீஸ் நேரத்தில் ரூ.2 கோடி பாக்கிக்காக, என் வீட்டை எழுதி கொடுத்தேன். இப்போது படம் தோல்வி. விநியோகஸ்தர்கள் என்னிடம் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். தோல்விக்கு அவர் காரணம் என்பதால் என்னிடம் வாங்கிய வீட்டை திருப்பித் தரவேண்டும். அப்போதுதான் நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்று கூறியுள்ளார்.

    English summary
    producer KS Ramarao lost a lot of money on recently released World Famous Lover. He has cleared off the dues of Vijay prior to release by giving off his Rs. 2 Cr worth apartment to the hero. Hence, he is asking Vijay to return the flat so that he could compensate a few losses. producer KS Ramarao lost a lot of money on recently released World Famous Lover. He has cleared off the dues of Vijay prior to release by giving off his Rs. 2 Cr worth apartment to the hero. Hence, he is asking Vijay to return the flat so that he could compensate a few losses.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X