For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆஹா...செம அப்டேட்டா இருக்கே...இன்னொரு மாநாடு எதிர்பார்க்கலாமோ ?

  |

  சென்னை : சிம்பு தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படம் பற்றி ஒரே சமயத்தில் பல அப்டேட்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் படுகுஷியாகி உள்ளனர். வந்திருக்கும் அப்டேட்டை பார்க்கும் போது இந்த படமும் மாநாடு படம் ரேஞ்சிற்கு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்க துவங்கி விட்டனர்.

  Recommended Video

  Silambharasan கெளரவ டாக்டர் பட்டம் எதற்காக கொடுக்கப்பட்டது | Filmibeat Tamil

  நீண்ட இடைவெளிக்கு பின் ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள சிம்புவின் அடுத்த படமான மாநாடு பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது. தியேட்டர், ஓடிடி என அனைவரையும் கவர்ந்து, பாராட்டுக்களையும், விருதுகளையும் அள்ளி வருகிறது. திரைக்கதைக்கு டாக்ரேட் கொடுக்க வேண்டுமானால் அது மாநாடு படத்திற்கு கொடுக்கலாம் என பலரும் புகழும் அளவிற்கு டைம் லூப்பை மையமாகக் கொண்டு, சூப்பரான த்ரில்லர் படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு கொடுத்திருந்தார்.

  50 நாட்களை கடந்து 100 கோடிக்கும் வசூலை தொடர்ந்து வருகிறது. மாநாடு. இதனால் சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மாநாடு படத்தை தொடர்ந்து டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. ஏ.ஆர்.ஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

  கடல் கன்னி உடையில் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!கடல் கன்னி உடையில் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

  அப்டேட் கொடுத்த ஐசரி கணேசன்

  அப்டேட் கொடுத்த ஐசரி கணேசன்

  விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக கெளதம் மேனன்- சிம்பு இணைந்துள்ள படம் இது. அதே போல் கெளதம் மேனன் படத்திற்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் உடல் எடையை குறைத்து வித்தியாசமான லுக்கில், முத்து என்ற கேரக்டரில் சிம்பு நடிப்பதாக இதுவரை கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெந்து தணிந்தது காடு படம் மட்டுமின்றி சிம்புவின் அடுத்த படம் பற்றிய அப்டேட்டையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேசன்.

  ஏப்ரல் ரிலீசுக்கு ரெடி

  ஏப்ரல் ரிலீசுக்கு ரெடி

  அவர் கூறுகையில், வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் ஏறக்குறைய முடிந்து விட்டது. மும்பையில் எடுக்கப்பட வேண்டிய இன்னும் ஒரு வார ஷுட்டிங் மட்டுமே மீதமுள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது தாமதமாகி வருகிறது. ஏப்ரல் 14 ம் தேதி வெந்து தணிந்தது காடு படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் கொரோனா சூழல் எப்படி இருக்கும் என தெரியவில்லை. அதைப் பொருத்தே ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும்.

  ஓ...இதெல்லாம் வேற இருக்கா

  ஓ...இதெல்லாம் வேற இருக்கா

  வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு ஐந்து கெட்அப்களில் நடித்துள்ளார். இவை அனைத்தும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு கெளதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளதால் பாடல்கள் வேற லெவலில் இருக்கும். கண்டிப்பாக அவை சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக, பூமராங்காக இருக்கும்.

  அட...இது சூப்பர் தகவலா இருக்கே

  அட...இது சூப்பர் தகவலா இருக்கே

  வெந்து தணிந்தது காடு ஷுட்டிங் முடிந்த கையோடு சிம்புவின் அடுத்த படமான கொரோனா குமாரு படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. 2022 ம் ஆண்டிற்குள் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமாரு ஆகிய இரு படங்களுமே ரிலீஸ் செய்யப்படும் என உறுதியாக தெரிவித்துள்ளார் ஐசரி கணேசன். இதனால் ரசிகர்கள் படுகுஷியாகி உள்ளனர்.

  டிரெண்டிங் கெத்து காட்டும் சிம்பு

  டிரெண்டிங் கெத்து காட்டும் சிம்பு

  தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இந்த தகவலை வெளியிட்ட உடனேயே ட்விட்டரில் #Silambarasan என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆனது. முதலில் இதை பார்த்து, எதற்காக திடீரென சிலம்பரசனை டிரெண்டிங் ஆக்குகிறார்கள் என புரியாமல் அனைவரும் கேட்க துவங்கினர். பிறகு விஷயம் தெரிந்ததும் வெந்து தணிந்தது காடு படம் பற்றிய அப்டேட்களை அதிகம் பகிர துவங்கி விட்டனர்.

  English summary
  In his recent interview Producer Isari ganeshan said that simbu's vendhu thanindhadhu kaadu movie is ready for april release.But release date depends upon pandemic situation. After completing VTK, immediately Corona Kumaru shooting will resume. These two movies will definetly be released within 2022.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X