அர்ஜூனின் அடுத்த படம் இதுதான். . ஆனால் ஹீரோ யார் தெரியுமா!

அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகனை விநாயகர் சதுர்த்தியன்று அறிவிக்கின்றனர்

சென்னை: தயாரிப்பாளர் சிங்காரவேலனின் அடுத்த பட கதாநாயகன் யார் என்று விநாயகர் சதுர்த்தியன்று அறிவிக்க உள்ளனர்.

கிருஷ்ணா, பிந்துமாதவி, காளி வெங்கட் நடித்த கழுகு 2 திரைப்படத்திற்கு பிறகு, தயாரிப்பாளர் சிங்காரவேலன் பிரம்மாண்டமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்குகிறார்.

Producer Singaravelans next!

பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப், 'கோட்டா' சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்பதை விநாயகர் சதுர்த்தியன்று அறிவிக்க உள்ளனர்.

'பேராண்மை' , 'பூலோகம்', 'மீகாமன்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதுகிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

Producer Singaravelans next!

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு தமிழ் தெலுங்கு, கன்னடம் என தென் இந்திய மொழிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் நடிகர் ஜெகபதி பாபுவும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கலக்கி வருகிறார்.

இவர்களுடன் ஜாக்கி ஷராப் இனைவது படத்திற்கு கூடுதல் பலத்தைத் தரும். ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக வந்த ஜாக்கி ஷராப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அதனால் இப்படம் நிச்சயம், மிகப்பெரிய படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X