பிரபல தயாரிப்பாளர் சென்னையில் இன்று திடீர் மரணம்!
பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சிவ பிரசாத் ரெட்டி காலமானார்.
சென்னை: பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சிவ பிரசாத் ரெட்டி சென்னையில் இன்று காலமானார்.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் டி சிவ பிரசாத் ரெட்டி. நடிகர் நாகர்ஜுனாவின் நெருங்கிய நண்பரான இவர், தெலுங்கில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர்.

தனது காமாக்ஷி சினிமா கம்பெனி மூலம், விக்கி தாதா, அல்லரி அல்லுடு, பாஸ், கிங், கேடி, தாதா, உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்துள்ளார். 1985ம் ஆண்டு முதல் படங்களை தயாரித்து வந்தார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட சிவ பிரசாத் ரெட்டி, கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார்.
62 வயதான சிவ பிரசாத் ரெட்டியின் மறைவு தெலுங்கு திரைப்பட உலகை சோத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications