ரச்சிதா மகாலட்சுமியின் ஃபயர் அந்த மாதிரியான படமா?.. தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் பிரபலமானவர். அதற்கு பிறகு பல சீரியல்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவருக்கு ராதாமோகன் தான் இயக்கிய உப்பு கருவாடு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதனையடுத்து மீண்டும் சிரியலுக்கு சென்ற அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார். ஆனால் அவரால் டைட்டில் வெல்ல முடியவில்லை. சூழல் இப்படி இருக்க இப்போது அவர் ஃபயர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
ரச்சிதா மகாலட்சுமி கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழில் அவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் கலைத்துறைக்குள் வந்த அவர் சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பாகத்தின் மூலம் தமிழ்நாட்டி ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து பல சேனல்களில் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தினேஷ் என்கிற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

நடிப்பில் பிஸி: அதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அந்த சீசனில் அவருக்கு டைட்டில் வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் திரைப்படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் இப்போது அவர் ஃபயர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவர் கொஞ்சம் தூக்கலான கிளாமரில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா பேசியிருக்கிறார்.
சிவா பேச்சு: அவர் பேசுகையில், "படம் ஒன்றை போடும்போதே ஊடக நண்பர்களுக்கு நன்றி என்றுதான் எல்லோரும் போடுவோம். அது ஃபார்மலிட்டிக்காக போடுவதில்லை. உண்மையில் பத்திரிகையாளர்கள் மீது இருக்கும் அன்பால் மட்டும்தான் அப்படி செய்துகொண்டிருக்கிறோம். சமீபத்தில் படங்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று வந்த அறிக்கையில் நிறைய விஷயங்கள் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்போதெல்லாம் ஓடிடி, சேட்டிலைட் வியாபாரம் எதுவும் இல்லாமல் 2018ஆம் ஆண்டுபோல் திரையரங்கை நம்பித்தான் இருக்கிறோம்.
எப்படி பிழைக்கும்: திரையரங்குகளுக்கு வந்து மக்கள் படம் பார்த்தால்தான் சினிமா பிழைக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. எனவே சினிமா விமர்சனங்களுக்கு எதிரானவன் நான் கிடையாது. படத்தை குறை சொல்வதையும், விமர்சனம் செய்வதையும் ஒழுங்காக செய்யலாம். வார்த்தைகளை பார்த்து பார்த்து கையாளலாம் என்பதுதான் எங்களுடைய ஒட்டுமொத்த கருத்தும். பத்திரிகையாளர்களுடன் எங்களுக்கு வேறு எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்பதை இங்கே உணர்த்திக்கொள்கிறேன்.
மேட்டர் இருக்கும்: இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஜே.எஸ்.கேவை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சரியாக பிளான் செய்து படத்தின் வேலைகளை முடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதை ஒரு அடல்ட் கன்ட்டென்ட்தான். அப்படி இருக்கும் கதையில் ஒன்று மெசேஜ் இருக்காது. அதேபோன்று மெசேஜ் இருக்கும் கதையில் மேட்டர் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் மெசேஜ், மேட்டர் என இரண்டுமே இருக்கின்றன. இப்படி ஒரு படத்தை பார்த்து ரொம்ப நாட்களாகிவிட்டன” என்றார்.


Click it and Unblock the Notifications











