Vaazhl அப்பா ஆசியுடன் தம்பி படத்தை தயாரிக்கும் சிவா: தலைப்பு 'வாழ்'
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதுப்படத்திற்கு வாழ் என்று பெயர் வைத்துள்ளனர்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரும் கூட. கனா படம் மூலம் அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதன் பிறகு அவர் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் அண்மையில் வெளியானது.
தன் தம்பி அருவி படம் புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் புதுப்படத்தை தான் தயாரிக்கப்போவதாக சிவகார்த்திகேயன் அறிவித்தார்.
வாழ்
சிவகார்த்திகேயன் மறைந்த தனது அப்பாவின் பிறந்தநாளான இன்று அவரின் ஆசியுடன் தான் தயாரிக்கும் மூன்றாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் படத்திற்கு வாழ் என்று தூய தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரை பார்த்தால் அருவி போன்று இந்த படமும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நஷ்டம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. மேலும் அவர் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திற்கும் சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது. இருப்பினும் நம்பிக்கையுடன் அடுத்த படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். நடித்தோமோ, சம்பாதித்தோமா என்று இல்லாமல் இந்த சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பு என்கிற தேவையில்லாத வேலை தேவையா என்று விமர்சனம் எழுந்தபோதிலும் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபடுகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள்
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வாழ்வோம் இந்த 'வாழ்' நிச்சயம் இன்னொரு அருவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் பிரபலங்கள்.
ரசிகர்கள்
சிவகார்த்திகேயனுக்கு அவரின் அப்பா என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, அப்பாவின் ஆசி எப்பொழுதுமே உங்களுக்கு உண்டு அண்ணா. வாழ் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் அது நிச்சயம் வித்தியாசமான கதை கொண்டதாகவே இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











