யார் சொன்னா உதவியே செய்யலனு.. 6 தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்த விஜய்.. உண்மையை சொன்ன ப்ரொட்யூசர்
சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். அதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கும் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார். இந்தச் சூழலில் விஜய் குறித்து தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
சௌந்தர பாண்டியன் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் பேசுகையில், "ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக், பிரபு உள்ளிட்ட 7 ஹீரோக்கள் தயாரிப்பாளர்களுக்கு தெய்வமாக திகழ்ந்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இப்போது விஜய் இருக்கிறார். அவர் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார். எனக்கு, கேஆர்ஜி, எம்.பாஸ்கர், எம்.ஆர் உள்ளிட்ட ஆறு பேருக்கு அவர் உதவி செய்தார். சூப்பர் குட் பிலிம்ஸுக்காக விஜய்யும், மோகன் லாலும் ஜில்லா படத்தில் சேர்ந்து நடித்தனர்.
பணம் கொடுத்தார்: அந்தப் படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. ஜில்லா ரிலீஸுக்கு முன்னர் விஜய் எங்கள் ஆறு பேரையும் அழைத்து 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார். நான் அப்போது அவரிடம் எங்களுக்கு ஒரு தேதி கொடுங்கள். அதை வைத்து எங்கள் வாழ்க்கைக்கு உதவுங்கள் என்று சொன்னேன். விஜய்யிடம் இருந்து சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. காந்த வாரம்கூட அதைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். விஜய்யை வைத்து ஆரம்பகாலகட்டத்தில் படம் தயாரித்தவர்கள் என்பதால் இந்த நேர்காணல் மூலம் அதை சொல்லிக்கொள்கிறேன்" என்றார்.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை. மாறாக 2026ஆம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. எப்படியாவது தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும் என்பதற்காக விஜய் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போகிறார் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











