மொசக்குட்டி... மனதை உலுக்கும் காதல், உறைய வைக்கும் ஆக்ஷன்! - தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்
வெற்றிப் படங்களான மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரித்துக் கொண்டிரும்கும் "மொசக்குட்டி" படம் வவித்தியாசமான காதல் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக சாட்டை நாயகி மகிமா நடிக்கிறார். பசுபதி, ஜோ மல்லூரி, சென்ட்ராயன் போன்றோர் நடித்துள்ளனர். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எம் ஜீவன். மயிலு, ஞாபகங்கள் படங்களை இயக்கியவர்.

காதல் - ஆக்ஷன்
படம் பற்றி தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் கூறுகையில், "இந்தப் படம் மைனா மாதிரி வித்தியாசமான கதைக் களம் கொண்டது. நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. மனதை உருக்கும் காதலும் இருக்கும், மனதை இரும்பாக உறைய வைக்கும் ஆக்ஷனும் இருக்கும்.

ஆக்சிடென்ட் காட்சி
மைனா படத்தில் பஸ் ஆக்சிடென்ட் காட்சி எப்படி பரபரப்பாக பேசப்பட்டதோ அதே மாதிரி மொசக்குட்டி படத்தில் பத்து குழந்தைகளுடன் செல்லும் ஜீப் ஒன்று விபத்தில் சிக்குவது மாதிரியான காட்சி பரபரப்பாக பேசப்படும். இதை கேரளாவில் படமாக்கினோம்.

பிரமாண்ட அரண்மனை
பிரமாண்டமான அரண்மனை ஒன்றில் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். பாடல்களும், படமும் நிச்சயம் மைனா, சாட்டை மாதிரியே பாராட்டும், வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பெரிய நடிகர்கள்
புதுமுகங்களை மட்டுமே வைத்துத் தான் படம் எடுப்பீர்களா ? என்ற கேட்டபோது, "மூன்று பெரிய நடிகர்களை வைத்து பிரமாண்டமாக படம் எடுக்க உள்ளோம். நடிகர்களை ஒப்பந்தம் செய்துவிட்டோம். ஷாலோம் ஸ்டுடியோஸ் மற்றும் சென்ட்சுரி இண்டர்நேஷனல் என இரண்டு நிறுவனங்களும் இணைந்து மூன்று படங்களை தயாரிக்கிறோம் அது பற்றி விரைவில் அறிவிப்பு வரும்," என்றார் ஜான்மேக்ஸ்.


Click it and Unblock the Notifications











