கார்த்தி ஃபேன்ஸ்.. உங்களுக்கு திங்கள் கிழமை ட்ரீட்.. சுல்தான் படம் குறித்த அசத்தல் அப்டேட்!

சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ள கார்த்தி, கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜோதிகாவுக்கு தம்பியாக தம்பி என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு கார்த்தியின் நடிப்பில் எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர்ஸ்

ட்ரீம் வாரியர்ஸ்

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தை, ரெமோ படத்தை இயக்கிய, பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். சுல்தான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

மேலும் இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். 2019 ஆம் ஆண்டே சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

சுல்தான் அப்டேட்

சுல்தான் அப்டேட்

தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தின் அப்டேட் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சுல்தான் டீசர்

சுல்தான் டீசர்

அதாவது சுல்தான் படத்தின் டீசர் வரும் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா அல்லது ஓடிடி தளமா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X